பள்ளிவாசல் நிறுவமாட்டோம் என ஒப்பந்தம் கைச்சாத்திட்ட முஸ்லிம்கள் - பதற்றமும் தணிந்தது
பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குருணாகலை அரியசிங்களவத்த என்னும் பிரதேசத்தில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை இருதரப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்து சுமூக கட்டத்தை அடைந்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது,
குருணாகல் - புத்தளம் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரதேசமே அரியசிங்களவத்த பிரதேசமாகும். இங்கு அஹதியா முஸ்லிம் சிறுவர் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் முஸ்லிம்கள் சிங்களவர்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அஹதியா பாடசாலைக்கும் சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த விவகாரம் எத்கந்த ரஜமஹா விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த விகாராதிபதி அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த மற்றும் முஸ்லிம்களுடன் இதுதொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இதில் இருதரப்பு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையடுத்து முஸ்லிம்கள், சிங்களவர் ஆகிய இரு தரப்புகளுக்கிடையேயும் முக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி முஸ்லிம் பள்ளிவாசலொன்று குறித்த பிரதேசத்தில் நிர்மாணிப்பதில்லை எனவும், முஸ்லிம் அஹதியா பாடசாலையை மட்டும் முன்னெடுத்துச் செல்வது எனவும் முஸ்லிம்கள் தரப்பில் ஒப்புக்கொள்ளபட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எத்தகந்த விகாரையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் நீதிபதியொருவர் முன்னிலையில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களருக்கு கையெழுத்து வச்சி லெட்டர் குடுத்து வாழ்வேண்டி இருக்கு. இதுக்குப்பேரா இன ஒற்றுமை, மதச் சுதந்திரம்? இதுக்குத்தானா ஜெனீவாவுக்கு ஓடினம், அறபு தெரிஞ்ச மெலவிமார அனுப்பினம்?
ReplyDeleteஇத இனிமேல் யாழ்ப்பானத்திலயும் செய்யச்சொன்னால் செய்வமா? இல்ல மதச்சுதந்திரம் எண்டு போராட்டம் நடத்தி ஆமிக்காரனோட சேந்து தமிழண்ட வெறுப்பைச் சம்பாதிச்சு .....கேவலம் ....இது எல்லாம் நமக்கு வேணும்.
ஸ்ரீ லங்கா எங்கே போகிறது ,மத சுதந்திரம் ,நாட்டின் எப்பாகத்திட்கும் போகலாம் வரலாம் என்று சொல்லும் அரசு,
ReplyDeleteஇதைத்தான் இன மதவாத இல்லாத நாடு என்று சொல்கிறதா?நீதிபதிக்கு எங்கே போனது அறிவு ,நாட்டுச் சட்டம்
என்ன சொல்கிறதென்று சட்டம் படித்தவருக்குத் தெரியாதா? பள்ளிவாசல் கட்டமாட்டோம் என்று கையெழுத்து
வைத்தது சரியா?யாருடைய பயமுறுத்தல்,சதியாலோசனைக்கு அடி பணியவேண்டிய நிர்ப்பந்தமா?
இன வெறியர்களே !எங்களுக்கு பள்ளியில் போய்த்தான் தொழவேண்டிய அவசியமில்லை.தண்ணீர்,பூமி, பூமிக்கு கீழ்,ஆகாயம் மற்றும் படுத்து,நடந்து,இருந்து,சாய்ந்து எப்படி வேண்டுமானாலும் தொழத்தான் அல்லாஹ் கட்டளை இட்டிருக்கிறான் .மினாராஹ் வைத்த கட்டடங்கள் எங்களுக்கு தேவையில்லை.உங்கள் கைகளினால் செய்தவற்றை
வணங்குபவர்களே ஒரு கொசுவைத்தானும் உங்கள் கடவுள்களினால் படைக்க முடியுமா?என்று அல்லாஹ் குரான்
மூலமாக சவால்விடுகிறான்.முடிந்தால் உங்கள் கடவுள்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் .
Meeraan
“,dpNky; ehl;.by; ve;j ,lj;jpYk; Gjpjhf gs;spthay; fl;l KbahJ” vd Gjpa rl;lk; te;jhYk; Mr;rupak; ,y;iy.
ReplyDeleteமீரான்,
ReplyDeleteசும்மா பம்மாத்து விடாதீங்க.
எல்லாம் நாமள் செய்த விளையாட்டுக்கு அல்லாஹ் தந்த பரிசு.
சும்மா நேரத்துக்கு ஏத்த மாதிரி கதையள் வுட்டு திரிஞ்சம்.
இப்ப பாருங்க ஒரு ஸ்கூல் கட்டுறதுக்கே கையெழுத்து வக்கச் சொல்லி நிக்கிறானுகள். இதை யாழ்பாணத்து தமிழன் கேட்டால் வப்பமா? இல்ல கிறிஸ்ட்ய்ஹவன் கேட்டால் விடுவமா? ஒப்பாரி வச்சு ஊரைக்கூட்டி சிங்கலவனோட கைகோத்து நிப்பம்தானே நானா? கையெழுத்து கேட்டவனிடம்
அதையும் வச்சுக்குடுத்துப்போட்டு கொசுவைப் படைக்க முடியுமா பசுவைப்படைக்க முடியுமா எண்ட கதையள் விட்டுக்கொண்டு திரியுறம்.
2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
ReplyDeleteExpecting same side Goal from Meeran...
ReplyDelete