Header Ads



அல்குர்ஆன் எரியூட்டப்பட்ட வீடியோவும், சில விமர்சனங்களும்..!

(புனித அல்குர்ஆன் எரியூட்டப்படும் வீடியோ ஒன்றை எமது இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அதுதொடர்பில் சில ஆரோக்கியமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. எப்போதும் வாசகர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அந்த விமர்சனங்களை வரவேற்கும் ஒரு பொறுப்புமிக்க ஊடகமென்ற வகையில் எமக்கு கிடைக்கப்பெற்ற இருவேறு விமர்சனங்களை இங்கு முன்வைக்கிறோம்)

ரவுப் ஹசீர்

உங்கள் வெப்தளத்தில் புனித குர்ஆன் எரிக்கப்படுகிற ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது . பொருத்தமான ஆதாரங்கள் எதுவுமின்றி இணைக்கப் பட்டுள்ள இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம் . இதை சிங்களவர்கள்தான் செய்கிறார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி? இனமுறுகல்களை உருவாக்கி பலன் பெற முயலும் யாராவது சிங்கள பாடலை இணைத்திருக்கலாமல்லவா .இதைப் போன்ற உரிய அத்தாட்சிஇல்லாத செய்திகளை இணைப்பது எரிகிற நெருப்புக்கு எண்ணை ஊத்துற வேலையாகும் . தயவுசெய்து இதனை உடனடியாக அகற்றுங்கள் .உங்கள் நண்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள் . இது நாம் விழிப்புடன் இருக்கவேண்டிய காலம் . உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றிகள். அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக... ஆமீன் !

..............................................................................................................................................

முஹம்மது அஸ்பரான்

குர்ஆண் எரிப்பு  மூலம் எதிர்பார்ப்பது முஸ்லிம்களின் சிங்கள மக்களின் மீதான வன்முறையை தூண்டுவதும் நாட்டில் குழப்பத்தை ஏட்படுத்துவதுமே. நாம் பொறுமையாக இருக்க இருக்க அந்த விடயங்களை செய்ய கூடியவர்களில் 50 % ஆனவர்கள் திருந்தி விடுவார்கள்.  மீதமுள்ளவர்கள் முஸ்லிம்களை மேலும் மேலும்  வன்முறையின்பால்  தூண்டுவார்கள். ஆகவே இது போன்ற விடயங்களை பகிரும் போது கணிசமான அறிவுரைகளுடன் பகிரவும் முடிந்தால் ஹதீஸ் அடிப்படியிலான ஒரு விளக்கத்தையும் வழங்கவும்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த டெரி ஜோன்ஸ் என்ற மன நோயாளி சென்ற மாதம் குர்ஆண் எரிப்புக்கு அழைப்பு விடுத்த போது அவ்வாறான ஒரு முயற்சிக்கு ஏற்பாடுகள் நடந்தாக ரகசிய தகவல்கள்  மூலம் அறியக்கிடக்கிறது. அதன் விடியோக்கள் கூடிய சீக்கிரம் இன்டர்நெட்  இணூடாக பகிரப்பட வாய்ப்பு உள்ளன.அவர்கள் ஈ-மெயில் இநூடாகவும் blog களினுடாகவும்  இதற்கான அழைப்பை விடுத்து இருந்தனர்.

இது மட்டுமில்லாது சிங்கள மக்களின் மத்தியில் முஸ்லிம்களை பற்றி துவேச என்னகளை புகுத்துவட்கான செயற்பாடுகளும் முஸ்லிம்களின் படிப்பறிவு குறைந்தவர்களை வன்முறையின் பால்  தூண்டுவதட்கான  செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது.
 
இவ்வாறன விடயங்களை பார்த்து விட்டு மிகவும் கேடுகேட்ட முறையில் இஸ்லாத்துக்கு முரணான முறையில் சீர்கெட்ட முறையில் அந்நிய சகோதரகளையும்,அந்நிய மதங்களையும் துற்ற தொடங்கினால் அவர்கள் இந்த இஸ்லாமிய விரோதிகளை  விட கேவலமானவர்கள். 99% வீதமான அன்னியவ்ர்கள் நல்லவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இப்படியானவர்களுக்கு என்ன செய்யலாம் ??

இப்படியான இஸ்லாம் விரோத செயற்பாடுகளுக்கு மூல  காரணம் இஸ்லாமிய எழுச்சியின் மீது  உள்ள பொறாமையே.அதனால் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் நாம் பின்வாங்கவில்லை நாம் மென்மேலும் இஸ்லாத்தின் பக்கம் விரைகிறோம்  என்பதை உணர்த்தலாம்.இஸ்லாத்தை இலங்கையில் நிலை நிறுத்த நாம் பாடு படப்போகிறோம்   என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

அதற்காக சில முன்னடுப்புக்கள்..

 *இஸ்லாமிய விரோதிகள் பெரும்பாலானோர் இன்டர்நெட் இன் ஊடாகவே தனது பெரும்பான்மையான செயட்பாடுகை கொண்டு செல்கின்றனர் குறைந்தது அவர்களின் செயபாடுகளுக்கு பதில் அளிப்பதற்காக வேண்டியேனும் இஸ்லாத்தை சிங்கள மொழியில் பரப்புதல்.

 *எதிர்வரும் நோன்பி காலங்களில் சிங்கள மக்களுக்கு இஸ்லாத்தை பற்றிய அடிப்படை தெளிவு  வழங்க கூடிய வகையிலும்,அந்நிய சகோதரர்களுடனான தொடர்பை கூட்டி கொள்ள கூடிய வகையிலும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.(உதாரணமாக:இஸ்லாமிய அமைப்புகள் சிங்கள மக்களையும் இணைத்து இப்தார் நிகழ்வுகை ஏற்பாடு செய்தல்.

பெருநாள் தினங்களில் வைத்திய சாலைகளில்,அநாதை இல்லங்களில்,முதியோர் இல்லங்களில்,சிறைசாலைகளில் எல்லாமததவர்களுக்குமான உணவு,பரிசு பரிமாறல்கள் ஏற்பாடு செய்யலாம்.. )அவ்வாறன செயற்பாடுகளுக்கு சிங்கள மொழி ஊடகங்களுக்கு செய்தியாக ..வழங்குவதற்கு அல்லது சிங்கள மொழி ஊடகங்களின் ஊடக அனுசரணையை பெற்று கொள்ள முயற்சிக்கலாம்.அவற்றின் போட்டோகளை  விடியோகளை அதிகம் அதிகமாக இன்டர்நெட் ஊடாக பகிர்தலையும் செய்யாலாம்.

*இதிர்வரும் பாகிஸ்தான் இலங்கை கிரிக்கட் போட்டிகளின் போது ..."நாம் இலங்கை முஸ்லிம்கள் நாம் இலங்கைக்கே ஆதரவளிப்போம்"(we are sri lankan muslim we support sri lankan cricket team".)போன்ற பாதைகளை அதிகம் ஏந்தவும் அதன் போட்டோகளை  விடியோகளை அதிகம் அதிகமாக இன்டர்நெட் ஊடாக பகிர்தலையும் செய்யாலாம்.

 *அல்-குர்ஆண் சம்பந்தமான சிங்கள மொழிமூல  கட்டுரைகளை சிங்கள பத்திரிக்கைகளில் பணம் செலவழித்தாவது வெளியிட முயற்சிக்கலாம்.
 *அல்-குர்ஆண் சம்பந்தமான துண்டு பிரசுரங்களை இதற்கு பிறகு வரும் காலங்களிலாவது பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் பகிர்வதற்கு முயற்சி எடுப்போம்.

 *பாடசாலைகளில்,பல்கலைகழகங்களில்,முஸ்லிம் உரிமையாளர்களின் நிறுவனங்களில் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யும்  முக்கிய நிகழ்வுகளின் போது பரிசு வழங்கும் போது அல் -குர்ஆண் சிங்கள மொழி translation ஐ பரிசாக வழங்கலாம்.

 *நெருங்கிய சிங்கள நபருகளுக்கு இனிமேல் ஆவது வெட்கம் கூச்சம் இல்லாமல் இஸ்லாம் சம்பனமான புத்தகங்களை பகிர்வதற்கு முன்வருவோம்.

7 comments:

  1. நல்ல கருத்துகளும்,நல்ல முயற்சிகளும்.மத பிரசாரகளே இந்த நிமிடத்திலிருந்து உங்கள் வேலைகளை
    ஆரம்பியுங்கள் .
    Meraan

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள் சகோ!
    ஆனால் நாம் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளக் கேட்பதுபோல இந்துக்களின் பொங்கல் விருந்தை உண்போமா? அதேபோல அவர்களின் சரஸ்வதி பூசை அவலை உண்போமா? அண்மையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து மதத்தலைவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் குத்து விளக்கை ஏற்றுவதற்கு வர மறுத்தார். புத்த கிறிஸ்தவ மதத்தலைவர்கள் ஏற்றினார்கள்.
    அனால் அவரின் பேச்சுக்கு நேரம் வந்தபோது மத ஒற்றுமை பற்றி கதை அடித்தார்!
    சிங்கள மொழியில் அல்குரானை கொடுத்தால் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். அதேபோல தேவாரப்புத்தகம் புத்த தர்மம் பற்றிய புத்தகத்தை நாம் பரிசாக வாங்குவோமா? அப்புத்தகங்களை மற்றும் இந்துக்களின் பண்டிகை உணவை தொடவே மறுப்பவர்கள் நாம்!

    பாருங்கள் சகோ, கிரிக்கற் போட்டியில் பாதாதைகள் பிடிக்க வேண்டி இருக்கு நம்மட விசுவாசம் காட்ட. இப்ப்படித்தான் ஜெனீவா கோசமும் போட்டோம்! அப்படி இருந்தும் நடந்தது என்ன?

    சகோ நாம இலங்கையில இருக்கம். இல்ல வெளிநாடு போனாலும் முஸ்லிம் நாடுகளுக்கு போவம். எல்லாம் நல்ல்ல இருக்கும். மேற்கு நாடுகள் போய்ப்பாருங்க முஸ்லிம்களுக்கு மரியாத எவ்வளவு கிடைக்கு என்று! காரணம் என்ன? யோசிப்போமா? சும்மா அமெரிக்காவ திட்டி ஒண்டும் நடக்கப்போறேல்ல சகோ! ச்வூதிக்காரன் குவைத் காரன் நமக்கு கொஞ்சம் காசை விட்டெறிவான், ஆனால் அமெரிக்காகாரனிட்ட கோடி கோடியா கொடுப்பான். என்ன ஆட்டமெல்லாம் காட்டினானுவள் ஆனால் சூடான், லிபியா, ஈராக், சிரியா, லெபனான், துனீசியா விசயம் என்னாச்சு? நம்ம சீனா ரசியா எல்லாம் எங்க போச்சு?

    மீரான் சகோ அதெப்படி மதபிரசாரகரை வேலையை ஆரம்பிக்கச் சொல்லுறீங்க. ஏன் நீங்கள் ஆரம்பிக்க மாட்டியளா? இனியாவது கதையடிபுகளை நிப்பாட்டுவம், சிந்திப்போம்!

    ReplyDelete
  3. முஹம்மது Asfaran நல்ல கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நானும் உங்கள் கருத்தை வரவேற்கின்றேன் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக Ishak Doha Qatar

    ReplyDelete
  4. Really there are some useful ideas to be followed by All of us insha allah and we should ask the almighty Allah to offer us success forever please.

    ReplyDelete
  5. Reply to anonymous
    ஐய்யா நாம் கிட்ட தட்ட கடந்த 100 வருடங்களாக அன்னிய மத சகோதரர்கள் மத்தியில் நம்மை பற்றிய தப்பபைபிராயங்களையே வழர்து வந்துள்ளோம்
    நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தான் தனது மனைவியுடன் பேசிகொண்டிருப்பதை பார்த்த சஹாபி தப்பபிபிராயம் கொள்ள கூடாது என்பதற்காக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது யாரும் தெறிந்தத விடயமே ...
    ஆனால் நாம் "அவன் என்ன நினைத்தால் என்ன நாம் எந்த தப்பும் செய்ய வில்லையே" என்ற மனோ நிலையிலே இருந்துள்லோம் ..தற்போதும் இருக்கிறோம் .......
    இஸ்லாத்தை,குர் ஆணை,முஸ்லிம்களை பற்றி தப்பபிபிராயம் வளரும் வரை இருந்து விட்டோம் ...இனிமேலும் இருப்பது மடத்தனம் ....இனிமேலும் இருந்தால் அதை போல் மடத்தனம் ....சமூக துரோகம் ...வரலாற்று துரோகம் வேறு ஒன்றும் இருக்க முடியாது ..
    இஸ்லாத்தை பரப்புவதற்கு முன்னர் அந்நிய மத சகோதரர்கள் மத்தியில் நம்மை பற்றிய தப்பபைபிராயங்களை நீக்க வேண்டும்...
    நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் உங்களின் சமஊக விடியங்க்ளில் உள்ள தூரத்தை விளங்க படுத்துகிறது ,,,
    அதே போல் நீங்கள் குறிப்பிட நினைப்பில் உள்ள முஸ்லிம்கள் நிறையவே உள்ளனர் அவர்களின் இஸ்லாம் பற்றிய தெளிவின்மையே முக்கிய காரணம் ...
    இஸ்லாம் அனுமதித்த ஹலாலான உணவில் என்னபா ??ஜாதி மதம் ...??
    அவனட பூசை உணவை தான் உண்ணகூடாது என்றால் அவன் கலாச்சார முக்கிய நிகல்வுகளுன் சம்பந்மான உணவுகளியுமா உன்ன கஊடாது ..??????

    ReplyDelete
  6. மார்க்கம் தெரிந்தவர்கள் சரியான அர்த்தங்களுடன் தெளிவுபடுத்துவார்கள் மார்க்க விடயத்தில் போதிய பாண்டித்தியம்
    இல்லாதபடியால்தான் மத பிரச்சரர்களே என்று குறிப்பிட்டு எழுதினேன் .தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச்
    சேதம் என்றொரு பல மொழியுண்டு .தவறைசுட்டிக் காட்டியதற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்.
    முஸ்லீம்களாகிய நாம் நமக்குள் தர்க்கித்துக் கொண்டு மென்மேலும் பிரிந்து போய்விடாமல் ஒற்றுமையாக இருந்து
    நல விடயங்களை எடுத்துச் செல்வோம்.
    மனிதர்களுக்கு படைத்தது(தர்காகளுக்கு நேர்ச்சை,கத்தம்,பாத்திஹா, மாற்றுமதத்தவர்கள் இறந்து போன உறவினர்களுக்காக செய்யும் அந்தியேட்டி உணவு வகைகள் )அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நேர்ச்சை
    செய்து அல்லது சிலைகளுக்கு முன்னாள் வைத்து பூஜிக்கப்பட்டவைகல் நமக்கு விலக்கப்பட்டவைகள் .
    இவை தவிர்ந்த ஹலாலான முறையில்அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து சமைக்கப்பட்டவைகள் உட்பட
    ஏனையவைகள் சாப்பிடலாம் தானே.எனக்கு தெரிந்தவையை எழுதியிருக்கிறேன்.விசய ஞானம் உடையவர்கள்
    இதைவிட அதிகமிருந்தால் எழுதுங்கள்.
    Meraan

    ReplyDelete
  7. நாம் ஏற்கனவே நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு விமர்சனம் பண்ணிக்கொண்டிருப்பதில் எந்தவித பயனும் இல்லை உண்மையில் சொல்வதானால் எங்களது நாட்டைப் பொறுத்த வரையில் மாற்று மதத்தவர்கள் நல்லவர்களே ஒருசில விசமத்தனம் பிடித்தவர்களின் இதுபோன்ற செயல்களுக்கு நாம் எந்த விதத்திலும் பயம் கொள்ளத்தேவை இல்லை. மேலும் இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த இடங்களில் அல்லாஹ்வின் கோபம் எப்படி இறங்கியது என்பதையும் நாம் அனுபவரீதியாக அறியாமல் இல்லை. இனி எங்களின் வேலை அல்லாஹ்விடம் பிரார்திக்கவேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.