உடன்படிக்கை, நிபந்தனை இன்றி இலங்கைக்கு உதவுவோம் - மஹிந்தவிடம் கட்டார் மன்னர்
உடன்படிக்கைகளோ, நிபந்தனைகளோ இன்றி தேவைப்படும் எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்குவதாக கட்டார் மன்னர் ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானி மற்றும் பிரதமர் ஹமாட் பின் ஜாசிம் பின் கலீபா ஜாபர் அல்தானி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின்போதே, கட்டார் மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோர் இதனைக் கூறியுள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இதுவரை கட்டார் அரசு வழங்கியுள்ள ஒத்துழைப்பு குறித்து திருப்தியடைய முடியாதென தெரிவித்த கட்டார் மன்னர், எதிர்காலத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நட்புறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் தமது நாடு மிகவும் கரிசனையுடன் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கு எந்தவொரு உதவிகளையும் வழங்க கட்டார் அரசு தயார் எனவும் அந்த நாட்டின் பிரதமர் கூறியுள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது கட்டார் அரசு, இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு தமது மற்றும் நாட்டு மக்களின் நன்றிகள் உரித்தாகும் எனக் கூறியுள்ளார்.

entha nerathulaum srilanka vukku uthawi seiya muslim naduhal munnitkinrana aanal srilanka arasu matrum perinawathihal muslim kalai nasukuwathil kuriyaha nitkinrana.ilahiya manam kondawarhalaha muslim kal irukka perinawathihaluku ean intha kurotha manam,.........dambulla pallivasal thdarfaha innum matru karuthu awarhalidaye waravillai,kuritha therarin petiyai parkum pothu manam nonthu valikkinrathu,al quran erika patta sambavam melum engalalai thunbaththil aalthiullathu.ithallam muslim naduhaluku theriyatha vidayama?.aanal awarhal manithafimanathudan ndanthu kolhirarhal.ithuve buddhistin vetha noolaha irunthal summa irupparhala?.sinthikkum manitharhaluku nichayamaha allah nerana valiyai kaatuwan.
ReplyDelete