ஹிஸ்புல்லா அரசியல் சரணாகதி, முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியை எதிர்ப்பேன் - ஹக்கீம்
இன்றைய தேசிய அரசியலில் அரசியல் கட்சிகளும் தேசிய இயக்கங்களும் மூன்று வகையான அரசியல் கொள்கைகளை பின்பற்றி வருவதாக நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய தலைவருமான றாஊப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
மாநகர முத்துக்கள் 2012 எனும் தொனிப்பொருளில் கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டின் கீழ் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா
(2012-05-25) மாலை சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் அமைக்கப்பட்ட விசேட அரங்கில் மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆரம்பமானது.
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த பிரமாண்ட அரங்கில் தொடர்ந்து பேசிய நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய தலைவருமான றாஊப் ஹக்கீம்,
சில அரசியல் வாதிகள் சரணகதி அரசியல் நடத்துவதாகவும் அவர்களால் தனிப்பட்ட வரப்பிரசாதங்களை பெற முடியுமேயன்றி சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும் போது வாய் பேச முடியாதுள்ளதாகவும், எதிர்ப்பு அரசியல் செய்ததால் தனது கட்சியில் இருந்து பிரிந்து சென்று சிலர் சரணகதி அரசியல் நடத்துவதாகவும் ஹிஸ்புல்லாஹ் திடீர் தவ்பீக் போன்றோரை குறிப்பிட்டு உரையாற்றினார்.
தான் இந்த அரசாங்கத்துக்குள் விரும்பி வரவில்லை எனக்கூறிய ஹகீம் அரசை விட்டு போகப்போவதுமில்லை என்றும் கூறினார்.
தான் இந்த அரங்கில் இருக்கும் போது தெஹிவளை பள்ளிவாசல் தொடர்பில் செய்தி ஒன்று கிடைத்ததாகவும் இதுவும் தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வை ஒத்த நிகழ்வு எனக்கூறிய அவர் இவைகளைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதுமில்லை என்றும் கூறினார்.
தான் ஜெனிவாவில் இந்த அரசாங்கத்துக்காக வக்காலத்து வாங்கச்சென்றிருந்த போதும்கூட பின்னர் தம்புள்ளை சம்பவம் தொடர்பாக பேச முற்பட்ட போது சிங்கள கடும்போக்காளர்கள் தன்னை விமர்சித்ததாகவும் தமிழீழ விடுதலை புலிகள் விட்ட சில தவறுகளை கூற முற்பட்ட போது தமிழ் கடும்போக்காளர்கள் விமர்சித்ததாகவும் இவைகளைக்கண்டு தான் அஞ்சப்போவதுமில்லை என்றும் கூறிய றாஊப் ஹகீம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் கான்கிரசிக்கும் சிறந்த புரிந்துணர்வு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வர பிரபாகரனே காரணம் எனவும் இவைகள் பற்றி கடும்போக்காளர்கள் அலட்டிக்கொள்வதுமில்லை என்றும் கூறினார் .
நாட்டின் தேசியத்துக்கு எதிராக தான் எப்போதும் செயட்படப்போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர் இந்த அரசு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தன்மைகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார். கட்சிக்குள் நிறையப்பேர்களை திருத்திப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக குறிப்பிட்ட ஹகீம் எதிர்ப்பு அரசியலின் மூலம் இலக்குகள் அடைய முடியாமல் போனதாகவும் தற்சமயம் இணக்க அரசியலில் எப்படி தங்களது இலக்குகளை அடைய முடியும் என தீவிரமாக பேசிவருவதாகவும் இதன் முதற்கட்டமாக கட்சிக்குள் இருக்கும் சுளிவு நெளிவுகளை சீர்படுத்தி வருவதாகவும் இதன் ஒரு அம்சமாக மாகாண சபை உறுப்பினர் எ.எம்.ஜமீலுக்கும் மேயர் சிராசுக்கும் இடையில் இருந்த சின்ன மனஸ்த்தாபத்தை தீர்த்து வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இணைந்த அரசியல் செய்ய உள்ளதாக குறிப்பிட்ட றாஊப் ஹகீம் அரசாங்கத்துடனா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடனா அல்லது ஏனைய கட்சியுடனா இணைந்து செயற்படுவேன் என்பதை குறிப்பிடவில்ல.

உங்கள் பேச்சு மிகவும் நன்றாயுள்ளது கேட்க மட்டுமே முடியும், இதுவரை எமது தம்புள்ளை ஜும்மா மஸ்ஜித் தொடர்பான ஆக்கபூர்வ நடவடிக்கை என்று தங்களால் ஏதும் செய்ய முடிந்ததா? என்ன செய்தீர்கள் என அடுத்த மேடையிலாவது கூறவும்.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸாருக்கு ஒரு வேண்டுகோள் மக்காள்........ உங்கள சோதிக்கிறத்துக்கான்டியும் உங்கட உண்மயான முகங்கள மக்கள் நல்ல பாத்துக்கனும் தெரிஞ்சுக்கனும் எங்கறத்துக்காவுமந்தான் இந்த டைம்ல முஸ்லிம்களுக்கு எதிரா சிங்கள ஆக்கள் செய்யிற அநியாயத்தையும் அங்கால கிழக்கு மாகாண சப தேர்தலயும் வச்சிருக்கான்...
ReplyDeleteசொத்தயும் சுகத்தயும் பெறுறதுக்காக பதவிய அடையனுமென்டு தேர்தல முக்கியமா வச்சி செயல்படுறவக யாரு?
அது தேவல்ல... முஸ்லிம்கள்ற இருப்பும் பாதுகாப்பும் நில பெறவேனும்டு முஸ்லிம்களுக்கெதிரா இந்த சம காலத்துல நடக்குற அயோக்கியதனங்களுக்கெதிரா குரல்கொடுக்குற, பாடுபடுற யாரு என்டு ?
என்னதான் முஸ்லிம்களுக்கு நடந்தாலும் சரி... நாம நம்முட வேலயப் பாப்பம் என்டு நக்குச் சிரிப்புக் காட்டிகிட்டு வாக்குப் பிச்ச மட்டும் கேட்டுகிட்டு வரத்தெரியும் இந்த பச்சோந்திகளுக்கு.... அது யாரு ஆக்கள் என்டு புத்தியுள்ள மக்களுக்கு விளங்கும்... நான் யாரயும் குறிப்பா சொல்லல..
முஸ்லிம்களுக்கு மத்த மக்கள் செய்யிற அநியாயத்த விட முஸ்லிம்கள்ற வாக்க வச்சி அரசியல் வாதியாகுனவக செய்யிற துரோகம் யாராலயும் மன்னிக்க ஏலாது....
எங்க சமூகத்துல நம்மள ஒரு குறயா சொல்லிடுவாக எங்கறதுக்காக வேண்டி தம்பள்ள பள்ளி விசயத்துல மட்டும் அங்க அங்க இருந்து ஆளுக்கு ஒரு அறிக்க, கண்டிப்பு மட்டும் வந்திச்சி ...
அதுக்குப்புறகு குருநாகல் , இப்ப தெஹிவள போன்ற இடங்கள்ள நடக்குற அநியாயம், அந்த மக்கள் செய்யிற அட்டகாசம் இதெல்லாம் இவகளுக்கு விளங்கல்ல...
ஊர் ஊரா குஜாலா குஜாலாவாப் போய் பன்னு பன்றாக... தேர்தல்ல சூடுபுடிக்காலாம்..... தேர்தல் முக்கியந்தான் மக்காள்... ஆனா அதவிட முக்கியமான விசயங்கள் நடத்தி என்னவோ செய்யக்குல அதுக்கு முக்கியத்தவம் குடுக்காம இரிக்கிறது இந்த எல்லா முஸ்லிம் அரசியல் வாதிக்கும் அவ்வளவு நல்லா இல்ல.....
ஆண்டவன் இரிக்கான்.... ஆள் மனசுல என்ன இரிக்கி எங்கறத கூட உன்னிப்பா அவதானிச்சுட்டு..... உரமா தம்பட்டம் அடிச்சுட்டு முஸ்லிம்கள்ற பெயரால ஏமாத்திட்டு திரியிறவகளுக்கு ஒரு நாள் காட்டுவான்..... அப்ப தெரியும் அவகளுக்கு.......
யாஅல்லாஹ்... முஸ்லிம்கள்ற பெயரால முஸ்லிம்களுக்கு அநியாயஞ்செய்றவகள உட்டும் நல்ல மக்கள காப்பாத்திடு....
அதோட உன்ன நம்பி கலிமாச் சொன்ன மக்களுக்கு எதிராவும் உன்ன வணங்கும் இறையில்லங்களுக்கு எதிராவும் இந்த நாட்டு தலையோங்குற அக்கிரமங்கள இல்லமால் செய்றதோட அவகுட திட்டங்கள தவிடுபொடியாக்கிடு றஹ்மானே.....!!!