Header Ads



மன்னார் ஆயரிடம் நான் மன்னிப்பு கேட்பதா..? கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும் (Update)


கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா


வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை குறித்து ஆராய மூவரடங்கிய சட்டத்தரணி குழுவொன்றை தாம்  நியமித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பிள் பிரதி அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புள்ளா,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,சிரேஸ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தகவல் தருகையில்,

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த,நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடை முறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனையினை எமது கட்சி எடுத்துரைத்துள்ளது. அதில்  வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பல்வேறு  விடயங்கள் உள்ளீர்க்கப்படவில்லை. அவற்றையும் சுட்டிக்காட்டி எமது ஆலோசனைகள் அடங்கிய எழுத்து மூலமான அறிக்கையினை கையளித்துள்ளோம். இதனை நடை முறைப்படுத்துவதன் மூலம் இடம் பெயர்ந்த மக்கள் பெரும் நன்மைகளை அடைவர்.

அதே வேளை வடக்கில் இருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.அதே போல் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் எவ்வித இனபாகுபாடுமின்றி முன்னெடுக்கப்படுவதை நான் உறுதி  செய்கின்றேன்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,

மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கிருந்த  தமிழ்  தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீரங்கா எம்.பி ஆகியோர் எவ்வித எதிர் கருத்துக்களையும்  கூறவில்லை. ஏனெனில் என்னால் முன் வைக்கப்பட்ட உரையின் உண்மையினை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் வெளியில் வந்ததன் பிறகு இந்த உரைக்கு புதிய வியாக்கியானத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரங்கா அவரது சொந்த  ஊடகத்தை பயன்படுத்தி  விசமத்தனமான பிரசாரங்களை செய்கின்றார்.

இதன் மூலம் தமிழ்-முஸ்லிம் கலவரமொன்றை மன்னாரில் ஆரம்பிப்பதற்கு துாபமிடுகின்றார் .அவரோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்  பொய்யான.இட்டுக்கட்டப்பட்ட கருத்துக்களை  விதைத்து இனரீதியான பிளவுகளை தோற்றுவிக்க.முயலுகின்றனர்.

தமக்கான ஊடகங்கள் இருப்பதனால்  முஸ்லிம்களுக்கு  எதிரான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர். முஸ்லிம்களுக்கான தனியான ஊடகங்கள்    இல்லை என்பதனாலும், இன்னும் எவ்வளவுக்கு  தழிம் ஊடகங்களை பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அதனை அவர்கள் பயன்படுத்தி இன ரீதியான பிளவுக்கு வித்திடுகின்றனர்.

மன்னார் ஆயர் குறித்து என்னால் கூறப்பட்ட  உண்மையான ஆதரபூர்வமான உரைக்காக மன்னிப்பு கோறுமாறு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைவிட்டுவருகின்றனர். நான் ஏன் மன்னிப்புக் கோற வேண்டும், ஆயர் அவர்களின் மதவிவகாரங்களிலோ ,அல்லது தனிப்பட்ட விடயங்கள் குறித்தோ நான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களில் தலையிட முற்பட்ட போது தான் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம்.இதற்காக நாம் எவரிடமும் மன்னிப்புக் கோறவேண்டிய தேவையில்லை.

முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்தினோம். தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில் ஆயர் அவர்கள் இருப்பார்கள் என்றால், எமது நியாயத்துக்காக வத்திக்கானுக்கும், தேவையேற்படின் ஜெனீவாவுக்கும் செல்ல தயங்கமாட்டோம். தமிழ் மக்கள் அகதிகளாக மெனிக் பாமுக்கு வந்த போதும்,ஏனைய மாவட்டங்களில் வந்து இருந்த போதும், இரவு பகல் என பாராது வவுனியா முதல் தொப்பிகல, வாகரை, மட்டக்களப்பு  வரை சென்று அந்த மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். நாம் இனவாதம் பார்க்கவில்லை,மதவாதம் பேசவில்லை,மனித நேயத்தை மட்டுமே எமது முன் வைத்து  பனியாற்றினோம் ,பணியாற்றிவருகின்றோம்.

மன்னார் நானாட்டான் பகுதியில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போதும்,இவர்களுக்கான காணி விடயமாக நடவடிக்கையெடுத்த போதும்,அதற்கு எதிராக சில மத தலைவர்களையும்,,மக்களையும் ஏவி ஆர்ப்பாட்டங்களை மஸ்லிம்களுக்கு எதிராக செய்ததின் பின்னணியில் மன்னார் ஆயர் இருந்துள்ளதை அதிகாரிகள் மற்றும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே போன்று சன்னார் காணிப்பிரச்சினையும் உருவெடுத்துள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதின் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு,அதற்கான அச்சத்தை யாரும் கொள்ளத் தேவையில்லை. அதே இடத்தில் தான் பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது. எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
                 

கிழக்கு மாகாண சபை தேர்தல்குறித்து அமைச்சர் கூறுகையில், கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கினறோம். அதற்காக ஏனையவர்களை பகைக்க வேண்டிய தேவையில்லை. தேசிய காங்கிரஸூடன் நாம் பேச்சுக்களை  நடத்திவருகின்றோம். கடந்த தேர்தலில் எமது கட்சி எடுத்த முயற்சியால் தான் கிழக்கில் ஆட்சியை பெற்றுக் கொள்ள முடிந்தது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த செய்தியாளர் மாநாட்டில் கூறினார்




3 comments:

  1. வெள்ளைக்காரன்(போத்துக்கல் ,ஒல்லாந்தர் ,பிரித்தானியா ) இலங்கை வந்த நேரம் கிறிஸ்தவம் அங்கில்லை.இந்தியாவில் பார்ப்பனர்கள் எப்படி எடுபிடியாக மாறினார்களோ அதே போன்றுதான் இலங்கை மேட்டுக்குடியினர் பதவிக்கும்,சுகபோகத்திக்கும் தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறினார்.இவர்களெல்லாம் கதைக்க வந்துவிட்டனர்.சரித்திரங்களை புரட்டிப்பாருங்கள்.மனிதனை மனிதனாகப் பார்க்கிறவனிடம் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம்.கேவலம் மனிதனை(ஆயரை ) கடவுளாக
    பார்க்கும் கூட்டம் மன்னிப்பு கேட்க சொல்லுது .கேணைத்தனமாகத் தெரியவில்லையா?
    Meraan

    ReplyDelete
  2. சூரியனைப் பார்த்து என்னமோ குறைப்பது போல் இருக்கிறது .மன்னிப்பு கேட்க சொல்வது.
    Yaal Mannan

    ReplyDelete
  3. உங்களுடைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இப்படித்தான் சென்ற மாகா ந சபை தேர்தலிலும் நாங்கள் தான் முதலமைச்சர் என்று கூறிவிட்டு பின்னர் நாங்கள் விட்டுக் கொடுப்பது தான் சிறந்தது என்று கூறியது மாதிரி நீங்களும் சரனாஹதியஹா கூறவரும் கவனமாக பேசுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.