கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தானார்
கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
கடந்த இரு தினங்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெறவுள்ளது.
தற்பொழுது கொழும்பில் உள்ள இவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மசூர் சின்னலெப்பை, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
.jpg)
இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைய்ஹி ராஜியூன் .
ReplyDeleteDaoud Tharik