இலங்கையில் தயாராகிக் கொண்டிருக்கும் இனவிரோதமும், நமது சமூக கடமையும்
மானா
எறும்பூரக் கற்குழியும் என்று ஒரு பழமொழியிருக்கிறது. இந்தப் பழமொழியை பெரும்பாலும் முஸ்லிம்கள் அறிவார்கள், ஏனெனில் இது சாதாரண சமூகப் புழக்கத்திலிருக்கும் ஒரு பழமொழி.
அதன் அர்த்தமும் அறியப்பட்ட ஒன்றே ! அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், இதுவும் ஒரு பழமொழி ஆனாலும் அதில் ஒரு சித்தார்ந்தமும் தங்கியிருக்கிறது.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பார்கள் இதுவும் ஏறத்தாழ மனித உணர்வுகளுக்கு ஒரே பொருளையே சொல்லித்தருகின்றது. இவற்றை நல்ல முறையிலும் எடுத்துக்கொள்ளலாம், தீயவர் எண்ணங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இலங்கை எனும் சிறு தீவைப் பொறுத்தவரையில், அதன் வரலாற்றுப் பதிவுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பது உலகறிந்த விடயம். குறிப்பாக போர்த்துக்கீயருக்கு முந்தைய இலங்கை தொடர்பில் சிங்கள - பெளத்த வரலாற்றைத் தவிர்த்து ஏனைய வரலாறுகள் தொடர்பான பதிவு நியாயமான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய, முக்கியமான விடயமாகும்.
அதே போன்றே, விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்கள இலக்கியப்பதிவுகள் தவிர வேறு ஆணித்தரமான பதிவுகளை ஏனைய சமூகங்களும் உருவாக்கவில்லை என்பதும் கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
அதிலும் குறிப்பாக கி.பி 8ம் நூற்றாண்டிற்குப் பிறகு இஸ்லாமியர்களாக மாறிய சோனக சமுதாயம், அதற்கு முன்னர் தாம் இந்த நாட்டிலே வாழ்ந்த வரலாற்றைப் பதிவாக்கிப் பாதுகாக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அத்துடன் யாழ்ப்பாண இராச்சியத்தின் பின்னர் உருவான தமிழர் இராச்சியம், ஒரு கட்டத்தில் சிங்கள இராச்சியத்திடம் வீழ்ந்து, பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டில் மீண்டும் துளிர்விட்ட போது, அவசர அவசரமாக தாம் வியாபித்திருந்த இடங்களில் எல்லாம் கோயில்களை உருவாக்கி, சைவ சமயத்தைப் பரப்பி, தமிழ் மொழி வளர்ச்சியிலும் பங்காற்றியது போன்று, அன்றைய இஸ்லாமிய சமூகமாக இருந்தவர்கள் தாம் பேசிய பாரசீகம், அரபு, அர்வி, மற்றும் பாலி-தமிழ் கலந்த கலப்பு மொழிகள் எதையுமே மேம்படுத்தவோ அல்லது தம் வரலாறுகளை ஏதாவதொரு மொழியில் பதிவாக்கவோ முனையவில்லை என்பதும் மறுக்க முடியாத வரலாறாகும்.
எனவே, சிங்கள வரலாற்று இலக்கியங்கள், உலக வரலாற்றுப் பதிவுகள் மற்றும் இதர தொல்பொருள் ஆதாரங்களைக் கொண்டே எமது வரலாற்றை மீண்டும் கோர்த்தெடுக்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம்.
இது குறித்த ஆழ்ந்த ஆராய்வில் அதீத கவனக்குறைவுடன் இருக்கும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் பெரும்பாலும் ஏனைய சமூகங்களின் முன்னால் வரலாற்று விழுமியங்களை எடுத்துச் சொல்லும் போது, தாம் இறுதியாகவும் இலகுவாகவும் தம்மை இணைத்துக்கொள்ளக் கூடிய இஸ்லாமிய வருகையையும், அதன் பின்னரான அரேபியக் கடல் வர்த்தகம், இந்தியாவுடனான கரையோரத் தொடர்புகள் போன்ற சுமார் 1100 - 1200 வருட வரலாற்றுக்குள் தம்மைச் சுருக்கிக் கொள்கிறார்கள்.
அதற்கு மேல் சென்று ஆராயும் வரலாற்றுத் தொடர்புகளுக்கான தொழிநுட்பங்கள் கடந்த காலங்களில் இல்லாமலிருந்ததும், பொதுவாகவே முஸ்லிம்களான சோனகர்கள் தம் நேரத்தை வர்த்தகம், இறை வணக்கம் போன்றவற்றோடு மட்டுப்படுத்திக்கொள்வதும், குறிப்பிட்ட பல நூற்றாண்டுகளாக இலங்கையின் ஆட்சியாளர்களோடு நல்லிணக்கத்தோடும் அவர்களது நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பதனால், தம் வியாபார அபிவிருத்திக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வரலாற்றுப் பதிவுகள், இலக்கியங்களுக்குக் கொடுக்கவில்லை எனும் கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இஸ்லாம் உருவான போது, அதை அரேபியர்களே வெகுவாக எதிர்த்தார்கள், ஆனால் இலங்கையில் வாழ்ந்த, தமிழில் "சோனகர்கள்", ஆங்கிலத்தில் "Moors", சிங்களத்தில் "யோனக மினிசு" என்று அறியப்பட்ட எம்மக்கள் ஆயிரமாயிரம் காலம் தாம் காத்திருந்த "உணர்வை" வழங்கிய இஸ்லாத்தினை எந்தவித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுக்கொண்டார்கள் என்கிற உண்மையையும் மறந்து விட்டோம்.
ஒரு வாதத்துக்காக இங்கே இருந்த சோனகர்கள் (அரபிகள்) தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறினாலும் கூட, அதே அரபிகளின் மூதாதையர்கள் மக்காவிலே நபியவர்களையே எதிர்த்துக்கொண்டிருக்க, இலங்கையின் இந்த விஷேட "அரபிகள்" ஏற்றுக்கொண்டார்களா எனும் கேள்வி எழ வேண்டாமா?
அந்த விஷேட அரபிகளைத்தான் சிங்கள - தமிழ் வரலாறுகள் "சோனகர்கள்" என்று கூறியது என்றால் இஸ்லாத்திற்கு முன்பே இங்கே சோனகர்கள் இருக்கத்தானே செய்தார்கள்? அந்த சோனகர்கள் வியாபாரத்திற்காகவே வந்தார்கள் என்று கூட வைத்துக்கொள்வோமே, அப்படித்தான் பார்த்தாலும் அவர்களது வியாபார வரலாறு கி.பி 8ம் நூற்றாண்டிலிருந்தும் 1000 க்கு மேற்பட்டவருடங்கள் பழமை வாய்ந்ததாக உலக வரலாறு சொல்கிறதே (அதற்கான ஆதாரங்கள் எமது இணையத்திலேயே தொடர் பதிவாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது ) ?
ஆக, அப்படித்தான் பார்த்தாலும் சிங்கள இலக்கியங்கள் கண்டறிந்த "யோனக மினிசு" இங்கே அவர்கள் வரலாறு எழுதப்பட்ட காலத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
அந்த யோனக மினிசு தம் சமயத் தேர்வாக "இஸ்லாத்தை" ஏற்றுக்கொண்டார்கள், மொழித் தேர்வாக, தமது தொடர்பாடல் மொழியான "அர்வி" போர்த்துக்கீயரால் அழிக்கப்பட்ட பின்னர் "தமிழையும்" , "சிங்களத்தையும்" ஏற்றுக்கொண்டார்கள் அவ்வளவே.
எனினும், இதை இஸ்லாமிய மக்களே எடுத்துரைக்கத் தயங்கியதாலேயே மகாவம்சம் இலங்கை வரலாற்றிலிருந்து மிகக் கவனமாக இஸ்லாமியர் தொடர்பான பதிவுகளை அகற்றியது.
வரலாற்றுப் பக்கங்களை வேண்டுமானால் கழற்றியெறியலாம், ஆனால் சமூக விழுமியங்களை அவ்வளவு எளிதாக மாற்றிவிட இயலாது. இன்றைய தேதியிலும் இலங்கையின் முக்கியமான பகுதிகளிலெல்லாம் முஸ்லிம் குடியிருப்புகள் இருக்கின்றன. அக்குடியிருப்புகளின் வரலாறுகளைத் தேடிச் சென்றால் ஆகக் குறைந்தது 1500-2000 வருட பழமை மிக்கனவாகவும், பல குடியிருப்புகள் கால எல்லைகளுக்கப்பாற்பட்டனவையாகவும் இருக்கின்றன.
எனினும், எமது வரலாற்றுத் தொடர்புகளை "இஸ்லாமிய எழுச்சிக்குப் பின்" தொகுக்க விளைந்தவர்களுக்கு நாம் வழி சமைத்துக்கொடுத்ததால் நவீன மனித நாகரீகம், உரிமைகள் எல்லாம் கடந்து, 400 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய சமூகம் அநுராதபுரத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கணிப்பிடக்கூடிய, இஸ்லாமியப் பெரியாரின் "சியாரம்" அழிக்கப்பட்டது (அப்போதும் நாம் வரலாற்று முக்கியத்துவத்தை மறந்தோம், எனவே மார்க்க ரீதியில் அது முக்கியமில்லை என்று கருதினோம் ), இன்று தம்புல்லையில் திடீரென சுமங்கல தேரர்கள் வந்து வரலாற்றை மாற்றுகிறார்கள், களுத்துறையில், காலியில், அவ்வளவு ஏன் நாளை கொழும்பிலும் இது நிச்சயம் நடைபெறும் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் நவநாகரீக இலங்கையின் 'இன விரோத' எழுச்சியின் பயணப் பாதை அப்படித்தான் இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தச் சோதனை ஒன்றும் புதிய விடயமல்ல, போர்த்துக்கீயர் என்று இந்த மண்ணில் காலடி வைத்தார்களோ அன்றிலிருந்து இந்த இன விரோதம் வடிவம் பெற ஆரம்பித்தது, நவீன காலத்தில் வீறு கொண்டு எழுந்திருக்கிறது.
கொழும்பு புறக்கோட்டை மற்றும் பிரதான வர்த்தகப் பிரதேசங்களில் எந்த நிலமும் முஸ்லிம்களுக்கு விற்கப்படக்கூடாது என்று 15ம் நூற்றாண்டிலேயே போர்த்துக்கீயர் கட்டளையிட்டார்கள், இவர்கள் இந்தக் கட்டளையை அமுல் படுத்தும் போது, ஏறத்தாழ கொழும்பின் பிரதான வர்த்தகப் பிரதேசத்தின் அனைத்து காணி நிலங்களும் முஸ்லிம்களின் சொத்துக்களாகவே இருந்தது என்பதை எம்மவரில் எத்தனை பேர் அறிவார்கள் என்பதும் இங்கே சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
போர்த்துக்கீயர் இலங்கை வாழ் முஸ்லிம்களை எதற்காக "Moors" என்று அழைத்தார்கள் என்பது ஆழ்ந்து ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் விடயமாக இருக்க, ஒருவேளை அவர்கள் வட ஆபிரிக்காவில் கண்ட கடல்வர்த்தகர்கள் போன்றவர்களாக இங்கிருந்தவர்களும் இருந்திருக்கலாம் போன்ற வாதங்களும், அவர்களது கலை கலாச்சார விழுமியங்கள் இங்கு காணப்பட்டன என்ற வாதங்களும், உருவ ஒற்றுமை இருந்ததாக வேறும் சில வாதங்களும் கூட முன் வைக்கப்படுகின்றன.
ஆனாலும், போர்த்துக்கீயர் இலங்கைக்குள் காலடி வைக்க முன்பதாகவே கொழும்பை அண்டிய பிரதேசங்களில், முஸ்லிம்களோடு போர் புரிந்தார்கள், அப்போது கண்டி இராச்சியம் முஸ்லிம்களைத் தான் முன் நிறுத்தியது, நம்பியும் இருந்தது, ஈற்றில் போர்த்துக்கீயர் நிலையாக இலங்கைக்குள் காலூன்றியதும் உடனடியாக இந்த நாட்டில் உருவாக்கிய இன விரோதம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது.
அதன் விளைவில் அன்றைய எம்மவர் இலக்கிய வளர்ச்சி முற்று முழுதாக அழிக்கப்பட்டது, அன்றைய சோனகரின் பாவனை மொழியாக வளர்ச்சி பெற்று வந்த "அர்வி" அழிக்கப்பட்டது, அது தொடர்பான இலக்கியங்கள், பதிவுகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டன, இறுதியில் போர்த்துக்கீயரின் ஏனைய கூட்டணியால் சோனக சமூகம் தனிமையாக்கப்பட்டது.
இந்த வரலாற்று அனர்த்தம் இலங்கையில் அமைதியாக வாழ்ந்த சோனகரின் எதிர்காலத்தை எந்தளவு மாற்றியமைத்தது என்பதை நிதானமாக ஆராய விளைவின், அதிலிருந்து பிற்பட்ட காலங்களில் "மொழித் தேர்வு" அவர்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்டதையும், அதன் விளைவில் சொந்த அடையாளத்தை இழந்து, தமிழ் அல்லது சிங்கள மொழியைத் தம் மொழித் தேர்வாகக் கொண்டு வாழவும் நாம் பழகி இப்போது ஆறு நூற்றாண்டுகளாகி விட்டன எனும் உண்மை புலப்படும்.
அர்வி எனும் மொழி அரபுத் தமிழ் என்று நாம் ஒரு விளக்கம் வைத்திருக்கிறோம், இருக்கட்டும். அப்படியே அது அரபுத் தமிழாக இருந்திருந்தாலும் கூட அது அரபைப் பேசிய மக்கள் தமிழைப் புகுத்திக்கொண்டதால் தான் அர்வியாக மாறிக்கொண்டடே தவிர, தமிழைப் பேசிக்கொண்டவர்கள் அரபைப் புகுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கனவே இங்கிருந்த முஸ்லிம்களிடம் பாரசீகம்,அரபு போன்ற மொழிகளின் ஆளுமை இருந்ததும், கரையோர கடல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த இந்திய கரையோர இஸ்லாமியர்களின் வருகையும், கலப்புமே திராவிட மொழியின் அல்லது மொழிகளின் ஆளுமையை இங்கிருந்த முஸ்லிம்களிம் அதிகரிக்கச் செய்ததே தவிர, அரபிகள் நேராக இங்கே வந்து தமிழ் பேசிக்கொண்டிருந்த முஸ்லிம்களோடு ஆரம்பத்தில் கலக்கவில்லை என்பதே உண்மை. இதற்கான ஆதாரம் சோனகர் வலைத்தளத்தின் சுவனரும் (சோனகரும்) தமிழரும் - IV (3) பகுதியில் மிகத் தெளிவாகத் தரப்பட்டிருக்கிறது.
ஆக வரலாறு, பாரம்பரியம், சமூக விழுமியங்கள் தொடர்பாக அக்கறையின்மையுடன் வாழும் நாம் இலங்கை வரலாற்றில் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. மிக அண்மைய உதாரணம் அநுராதபுரமாகும்.
அங்கே நாம் ஒரு வரலாற்றுச் சான்றை இழந்து விட்டோம், அதை மீளப் பெறும் எண்ணம் எம் அரசியல் தலைமைகளிடமும் இல்லை போதிய உணர்வு எம் மக்களிடமும் இல்லை.
தமிழர் பகுதியில் எம் கண் முன்னால் நடந்த போர், அதன் விளைவுகள், இன்றைய நிலையில் அதன் வரலாறு திரிபாக்கப்பட்டு மாறிச்செல்லும் விதத்தையும் கூட கண்கூடாகப் பார்க்கும் நாம் அதிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது பழங்கால மன்னர்களுக்கிடையிலான போரல்ல, நவீன கால திட்டமிட்ட செயற்பாடுகள், எனவே இன்றைய காலத்தில் சமூகங்கள் குறி வைக்கப்படுகின்றன, அவர்கள் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படுகின்றன.
பெரும்பான்மையான பெளத்தர்கள் இனவிரோதத்திற்கு எதிரானவர்கள், இதுதான் இன்றைய எமது நிலைப்பாடு. ஆம் அதிலும் உண்மையிருக்கிறது. நாகரீகம், மனித உரிமை மற்றும் சமூக ஒற்றுமை, நாட்டின் அபிவிருத்தி போன்ற விடயங்களில் அக்கறையுள்ள எந்த பெளத்தரும் இது வரை சுமங்கல தேரர் போன்ற இன விரோதிகளை ஆதரிக்கவில்லை. ஆம் ! அவர் தனி மனிதராகப் பார்க்கப்படும் வரை யாரும் அவரை தற்காலிகமாக ஆதரிக்கப்போவதில்லை. ஆனாலும், இது எத்தனை காலத்திற்கு தொடரும்? அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமா நகராதா? வரலாறு நமக்கு எடுத்துரைப்பது என்ன?
அப்படியானால் பெளத்தர்கள் நம் விரோதிகள் என்று சொல்வதா இந்தக் கட்டுரையின் நோக்கம்? இல்லவே இல்லை !!
சுமங்கல தேரர் போன்ற இன விரோத சக்திகளின் வளர்ச்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என்பதுதான் எம் ஆதங்கம். அதன் கடந்த கால பாதிப்பைத் தமிழ்ச் சமூகம் பல தசாப்தங்களாக அனுபவித்துத் துன்புற்றது, இப்போது நாம் துன்பத்தை நோக்கி நகர்த்தப்படுகிறோம், அதே வேளை முற்போக்கு பெளத்த மக்கள் "இன்னும்" எமக்காகக் குரல் கொடுக்கவும் கை கொடுக்கவும் இருக்கிறார்கள்.
இலங்கையில் வளரும் இந்த இனவிரோதம், எதிர்கால இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைத் தவிர்ப்பதாயின் இலங்கை முஸ்லிம் சமுதயாம் தனியாகவோ, அல்லது பெளத்தர்களுடன் இணைந்தோ செயற்படும் தேவை அங்கே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மார்க்கப் பற்றில் உயர்ந்து நிற்கும் எம் சமுதாயம், வாழ்வியல், சமூகவியல், வரலாறு, இலக்கியம் மற்றும் அனைத்து விடயங்களிலும் மேலதிக கவனம் செலுத்த வேண்டும்.
எம் உரிமைகள் தாக்கப்படும் போது குரல் கொடுப்பதெல்லாம் சரி, நாளை இதன் விளைவுகள் வளர்வது எவ்வாறு தடுக்கப்பட வேண்டும் எனும் செயற்பாடு எம்மிடம் இருக்க வேண்டும்.
அதற்கு எம் மத்தியில் எம் சமூகத்தின் வரலாறு, பாரம்பரியம், எம் இனத்தின் தனித்துவம் முதல் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் போதிய அறிவூட்டல் மற்றும் மனித உரிமை தொடர்பிலான எமது செயற்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்பட வேண்டும்.
கொத்துக் கொத்தாக குண்டையள்ளி வீசி மக்களை அழித்துவிட்டு அப்படியொன்று நடக்கவே இல்லையென்று ஒரு சாரார் சொல்லலாம் ஆனால் அல்லாஹ்வின் அடியார்கள், பெருமானார் முஹம்மது நபியவர்களின் வழியில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டிய இஸ்லாமிய சமூகமும் துணை நிற்கலாமா என்பது தொடர்பில் நாடளாவிய சமூக விழிப்புணர்வு வேண்டும். அதனையே இறுதியாக எம் சாதனையாக நினைத்துக்கொண்டு, இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று அதற்கு இதுதானா ? என்று இரங்கும் நிலையை எம்மவர்கள் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தம் கருத்துக்களைக் கூறும் உரிமையிருக்கிறது, அவ்வாறே ஒரு சாராரின் கருத்துக்கு எம் சமூகத்தில் ஒரு சாரார் உடன் பட்டாலும், அது அவர்களும் இந்த நாட்டின் உரிமையுள்ள பிரஜைகளாக செய்திருக்க வேண்டுமே தவிர, இரண்டாந் தரத்தில் "நன்றிக் கடனுக்காக" செய்யும் தேவை எமக்கு இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களும் உணர வேண்டும்.
இலங்கைத் தீவை வளப்படுத்துவதில், அபிவிருவித்தியில் அன்றைய எம் மூதாதையர்கள் ஆற்றிய பெரும் பங்கிற்கு, சிங்கள மன்னர்கள் நன்றிக்கடனுடன் பல அரசியல் மட்ட சலுகைகளைத் தந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை, அவை பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பட்டயங்கள், அவை இன்றும் கூடப் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் உண்மை. ஆனாலும், இத்தீவில் நாம் அனுபவிக்கும் அனைத்துமே "சலுகைகள்" அல்ல, சலுகைகள் எம் உரிமைகளோடு கலந்திருக்கின்றன.
எனவே, ஒரு சுதந்திரமான இலங்கைப் பிரஜையாகத் தம் பங்கை நாட்டுக்கு வழங்குவது ஒவ்வொரு இஸ்லாமியரினதும் சுய விருப்பு வெறுப்பாக இருக்கும் அதே வேளை, அந்த உரிமையையும் சலுகையாகக் கணிப்பிட்டு எம்மை நாமே இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை, அதற்காக இரங்கிக்கொண்டிருக்கும் தேவையும் இல்லை.
எமது போராட்ட வடிவங்கள் மாற்றப்பட வேண்டும், எம் குரல்களில் அழுத்தங்கள் அரசியல் ரீதியில் உணரப்பட வேண்டுமென்றால் முதலில் இந்த நாட்டில் நாம் யார்? என்பதை எம்மவர்கள் உணர வேண்டும், நாம் விருந்தாளிகளோ இரண்டாந்தரப் பிரஜைகளுமோ அல்ல என்பது உணர்வுபூர்வமாக அறியப்பட வேண்டும்.
நாட்டின் சமூகத்தில் நாம் எப்போதுமே பங்களித்தே வருகிறோம், ஆனாலும் எம் சிந்தனை மட்டத்தில் நாம் உரிமையுள்ள பிரஜைகள் என்பதை மறந்து விடுகிறோம். இஸ்லாம் எம் மார்க்கம், நபி வழி எம் பாதை, இது எமது நம்பிக்கை சார்ந்த விடயம். ஆனால், நாம் இந்த நாட்டின் பிரஜைகள், சமவுரிமையுடையவர்கள், வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இந்த நாட்டின் மூன்று முக்கிய இனங்களில் ஒரு தனித்துவமான இனத்தவர்கள் என்பது உணரப்பட வேண்டும்.
முஸ்லிம் எனும் அடையாளம் எமக்கு எம் மார்க்கம் தந்தது, அப்படியானால் நம் மூதாதையர்கள் முஸ்லிமாக முன்னர் யாராக இருந்திருப்பார்கள் என்று சிந்திக்க எம்மைத் தடுப்பதெல்லாம் கடந்த கால திரிபாக்கப்பட்ட வரலாறுகள். எனவே தான் 8ம் நூற்றாண்டுக்கு அப்பால் செல்ல முடியாமல் திக்கித் திணறுகிறோம்.
எம் சமூக அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு உணரப்பட வேண்டும், எம் இலக்கியங்கள் பதிவாக்கப்பட வேண்டியதன் யதார்த்தம் எமக்குள் அறியப்பட வேண்டும், எம் வரலாறு மிகத் தெளிவாக நாளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்பட வேண்டும், அதற்கான செயற்பாடுகள் வேண்டும், ஆக்கபூர்வமான விளைவுகள் காணப்பட வேண்டும்.
இவையனைத்திலும் கண் மூடித்தனமாக இருப்பதன் மூலம் எதிர்கால இலங்கை எம் இருப்பை, எம் தனித்துவத்தை, எம் உரிமைகளைக் கேள்வி கேட்கும் ! அன்று நாம் அநாதைகளாக்கப்படுவோம்.
போர்த்துக்கீயர் வந்து அழித்தொழித்த எம் இலக்கியங்களை, மொழியை இன்றளவும் எம்மால் மீட்டெடுக்க முடியவில்லை, வரலாற்றில் தொடர்ச்சியாக அழித்தொழிக்கப்பட்ட எமது குடியிருப்புகள், கலாச்சாரங்களை இன்றும் எம்மால் மீளப் பெற முடியவில்லை, அதே போன்று தான் இன்று அழிக்கப்படும் எமது வரலாற்றை இன்னும் ஐந்து நூற்றாண்டு சென்றாலும் எம்மால் நிரூபிக்க முடியாமல் போகும்.
போர் வேண்டாம் , வன் செயல் வேண்டாம், ஆனால் நம் மத்தியில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எம் வரலாற்றை, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் கடமை நம்மிடம் இருக்கிறது. அரசியல் ஒரு பக்கம் போகட்டும், எம் சமூகக் கடமையென்று ஒன்று இருக்கிறது.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் அழிந்து போன எம் மொழி வாசனை இன்றும் எம்மிடம் இருக்கிறது, அதைப் பலர் அரபுச் சொல் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அரபு அல்லாத பல எமது சமூகத்தினரால் மாத்திரம் பாவிக்கப்படும் ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அவ்வளவு ஏன்? தமிழ் மொழியில் கூட எமது சமுதாயம் அதுவும் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் பாவிக்கும் பல சொற்கள் உலகறிந்த தமிழிலேயே பாவனையில் இல்லை. இலங்கையின் பழங்குடிகள் வேடர்கள் என்கிறார்கள், அந்த வேடர்களின் பழக்கவழக்கங்களில் ஏராளமானவை இன்றளவும் எம் மக்களிடம் இருக்கிறது,வேடர்களோ சிங்களவர்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார்கள், அப்படியானால் அதன் தொடர்புகள் என்ன? நாம் இலங்கையின் வரலாற்றில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது எம் தவறா? இல்லையே, அப்படியானால் எமது பாரம்பரியம் என்ன என்பது முதல் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.
கடந்த காலத்தில் இழந்ததை நாம் மீளப் பெறுகிறோமோ இல்லையோ எதிர்கால இலங்கையில் எமது பாரம்பரியத்தையும் நிலைப்பாட்டையும் மீள வரையும் தேவையுள்ள காலமிது.
நாம் ஒரு தனித்துவமான "இனம்" என்பதை எம்மில் பெரும்பாலானோர் மறந்து விட்டோம், அதற்கான காரணம் நாம் எமது மார்க்கத்தைக்கொண்டு அடையாளப்படுத்துவதை கடந்த 60 ஆண்டுகளாக விரும்பி ஏற்றுக்கொண்டமையாகும். ஆனாலும், இலங்கையின் அரசியல் யாப்பு எம்மை இன்னும் எமது இனத்தைக் கொண்டே அடையாளங்காண்கிறது.
சோனகர் எனும் பெயரே ஏதோ புதுப் பெயர் போன்று உணரும் எம் மக்கள், தம் அரச பிறப்புச்சான்றிதழ்களை எடுத்து நோக்கின், இனம் எனும் இடத்தில் : "இலங்கைச் சோனகர்" என்றிருப்பதைப் பார்த்தாவது, அது ஏன் அப்படி? என்றொரு கேள்வியைத் தமக்குள் எழுப்பி, எதிர்கால இலங்கைக்கும் எம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சவால்களுக்கும் தயாராவார்களா ?

இன விரோதம் இலங்கையில் தயாராகிக்கொண்டிருப்பதை விளக்கும் ஒரு சிங்கள மொழியிலான காணொளி.
[youtube]http://www.youtube.com/watch?v=dHjZdDyBuuQ[/youtube]

வாசிப்பதற்கு ஒரு நல்ல கட்டுரை.
ReplyDeleteஅனுராதபுரத்தில் இழந்ததை மீட்டெடுக்க அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப் பட வேண்டும்.
அது முஸ்லிம்களின் சொத்து. அது மீட்டெடுக்கப் பட வேண்டும்,ஆனால் கபுறு வணக்கம் நடக்கும் சமாதியாக அல்லாமல்,
அல்லாஹ்வை மட்டும் தொழும் மஸ்ஜிதாக மீட்டெடுக்கப் பட வேண்டும்.
முஸ்லிம்களின் நோக்கம் சுவர்க்கம் என்பதிலிருந்து பிறழ்ந்து விடாமல் இருக்கட்டும்.
வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ''கட்டப் பட்ட கபுருகளை உடைக்காமல் விட்டுவிடாதே'' என்ற நபிமொழியை
உதாசீனம் செய்துவிட முடியாது. தனது சொந்த தாய் தந்தையரை விட அல்லாஹ்வின் கட்டளைகள் முக்கியம் என்னும் பொழுது, வரலாற்றை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் கட்டளையை ஒரு முஸ்லிம் மீறவே முடியாது.
வரலாறும் இலக்கியங்களும் இஸ்லாத்துக்கு முரண்படாத வகையில் இருந்தால் மட்டுமே போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும். கஆபாவில் விக்கிரகங்கள் வைத்து வணங்கியதும், நிர்வாணமாக வலம் வந்ததும் வரலாறுதான், அனாலும் இஸ்லாம் என்ற சத்தியம் வந்ததன் பின்னர், இவை எதுவும் போற்றிப் பாதுகாக்கப் படவில்லை.
இன்றைய உலகில், நமது நிலைமை, பலம், விவேகம், ஆற்றல், அறிவு என்பவற்றை வைத்துத்தான் முடிவுகள் எடுக்கப் படுகின்றனவே தவிர, ஆயிரம் வருடம் பழமையான வரலாற்றையும், இலக்கியங்களையும் வைத்து அல்ல என்கின்ற நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பண்டைய இலக்கியத்தில் ஒரு நகரம் முஸ்லிம்களின் சொத்து என்று இருக்கின்றது என்று சொல்லிவிடுவதால் யாரும் கொடுத்துவிட்டுப் போகப் போவதில்லை, காணி உறுதிக்குத்தன் மதிப்பு.
அமெரிக்காவில் செவ்விந்தியர்களும், அவுஸ்திரேலியாவில் அபிரிஜீன்கள் என அழைக்கப்படும் பழங்குடியினரும் பூர்வீக குடிகள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இந்த வரலாற்று உண்மையை வைத்து, வெள்ளையர்களும், குடியேறிகளும் அந்நாடுகளை விட்டு வெளியேறப் போவதுமில்லை, ஆட்ச்சியை பூர்வீக குடிகளிடம் ஒப்படைக்கப் போவதுமில்லை.
ஆகவே வரலாறு, இலக்கியம் என்று மட்டும் காலத்தைக் கழிக்காமல், குர் ஆன், ஹதீஸ், மற்றும் விஞ்ஞ்சான துறை சார்ந்த கல்வி, தொழில் நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் முன்னேறுவதற்கு முயற்ச்சிக்க வேண்டும்.
பசித்த தச்சன் பழம் கணக்குப் பார்த்தானாம் என்பதாக முஸ்லிம்களின் கதை இருந்துவிடக் கூடாது.
I agree with the writer. Quran and hadeeth are to guide us in life but we should make efforts to protect our history because sri lanka is not a muslim country.
ReplyDeleteDear Abdul,
ReplyDeleteHistory alone will buy no barly in this world and nothing at all in Akhirah.
Who said history alone mr.name less, you should read the article properly without your own assumption.
ReplyDeleteDear Abdul,
ReplyDeleteI had answered to your comment, not to the article.
Better, you read your 1st comment again.
By the way, the 1st comment in tamil has put everything about the article in nutshell.
Thank you.
Yours truly
Name Less
To my comment? Unfortunately i do not take advise from anonymous people like you who has no proper understanding of whats being written in the first place and try to show off under the cover of quran and hadeeth may be due to the fact that you want to distrupt a good cause? who knows. Genuine people will have genuine ways and will know to bring up appropriate matters under appropriate articles.
ReplyDeleteஐயா abdul ,நான் Anonymous ஆகத்தான் குறிப்பை பதிந்தேன் என்பது சரிதான், அனால் நீங்கள் உங்களை இங்கே மிகத் தெளிவாகவும், மிகச் சரியாகவும் அடையாள படுத்திவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கின்றீர்களோ??
ReplyDeleteயார் வேண்டுமானாலும் ஒரு யாகூ, லைவ்ஜேர்னல், கூகுள், AIM அல்லது வேறு அனுமதிக்கப்படும் கணக்கை ஏதாவது ஒரு பெயரில் ஆரம்பித்து கருத்தை பதிந்து விட்டுப் போகலாம் என்கின்ற சிறு விடயம் கூட உங்களுக்கு தெரியாத பொழுது, இங்கே கூறப்பட்டுள்ள விடயங்களை எல்லாம் சரியாக புரிந்து கொள்வீர்கள் என்பதனை எப்படித்தான் எதிர்பார்ப்பது?
ஒரு முஸ்லிமுக்கு, ஒருபொழுதுமே abdul என்று மட்டும் தனியாக பெயர் இருந்ததில்லையே? உங்களை முழுமையாக அடையாளப்படுத்தி விட்டதாக கற்பனை செய்ய வேண்டாம். abdul என்ற பெயரில் நீங்கள் கருத்து பதிவதால் மட்டும் எந்த மதிப்பும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதனை உங்கள் மர மண்டைக்கு புரிய வைப்பதற்காக நானும் Abdullah என்ற பெயரில் கருத்தை பதிந்துள்ளேன்.
புரிந்துகொள்ளுங்கள், பொது இணையத்தளங்களில் யாகூ, லைவ்ஜேர்னல், AIM அல்லது கூகுள் மூலம் கருத்து பதியும்பொழுது அடையாள அட்டை, கடவுச் சீட்டு, கிராம சேவகர் சான்றிதழ் எல்லாம் கேட்பதில்லை. Anonymous ஆக பதிவதற்கும், எதோ ஒரு பெயரில் கருத்து பதிந்து விட்டுப் போவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. குறிப்புக்களை கருதும் பொழுது,சொல்லப்படும் கருத்துக்கள் தான் நோக்கப் படுகின்றனவே தவிர, பெயர்கள் அல்ல. யாராவது விரும்பினால் ஜெயசூரிய என்ற பெயரில் கூட கருத்து பதிந்து விட்டுப் போகலாம், அதற்காக அது சனத் ஜெயசூரியாவின் கருத்து என்று ஆகிவிடப் போவதில்லை. கிணற்றுத் தவளை போல இருக்காமல் ஏனைய செய்தித் தளங்களுக்கும் சென்று பாருங்கள். டெய்லி மிரர் போன்ற தளங்களில் மகிந்த, கோத்தபாய போன்ற பெயர்களிலெல்லாம் கருத்து பதியப்பட்டிருப்பதை காண்பீர்.
தயவுசெய்து நகைப்பிற்கிடமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம்.
அடுத்து, இங்கிலீஷ் தெரியும் என்று அடித்து முழக்காமல், தமிழில் கருத்தை பதியுங்கள், ஏனென்றால் கட்டுரையே தமிழில் இருக்கும் பொழுது நீங்கள் மட்டும் என்னவாம்?
I now understand whats your real intention is, may allah shower his blessings on you to know your limits and write descently in public forums. Also, don't worry i will be able to write in better tamil than you once i learn the keys and how to type directly on web pages.
ReplyDeleteஇதுதான் உங்கள் பதிலா?
ReplyDeleteஇதைச் சொல்லத்தான் இவ்வளவு தடுமற்றமுமா?
நானே சொல்லாத பொழுது, எனது உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டதாக சொல்கின்றீர்களே, மற்றவர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளதல்லவா? எங்கே போகின்றது உங்கள் சிந்தனை? உங்களில் எங்கேயோ கோளாறு இருக்கின்றது, பொது இடத்தில் கருத்துச் சொல்ல வருமுன், உங்களில் உள்ள கோளாறை சரி செய்துகொள்ளவும்.
இந்த எழுத்தாளர் முஸ்லிம்கள் மீது முன்வைக்கும் வேண்டுகோளின் நோக்கம் வேறு, தவ்ஹீத் வாதம் என்பது வேறு எழுத்தாளர் கபுறு வணக்கம் வேண்டும் என்பதற்காக அந்த சியாரம் குறித்து சொல்லவில்லை அவரின் ஆதங்கம் வரலாற்று பதிவு ஒன்று மறைக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதே, உகுவெல மானாம்பொட எனும் இடத்தில் பள்ளிக்கு அருகாமையிலேயே அமைந்திருந்த ஜியாரத்தை முஸ்லிம்களே உடைத்தார்கள் ஆனால் அது 200 வருட பழைமையான தேசிய பழங்கால சொத்து என்று பள்ளி நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கும் தொடுத்து அதில் வெற்றியும் பெற்று மீண்டும் கட்டியும் விட்டனர். இதற்கு முழுக்க முழுக்க அலவி மவ்லானா பின்புலத்தில் இருந்து செயல்பட்டார்,அதே கையாலாகாத மௌலானாவுக்கு ஏன் சிங்களவர்களால் உடைக்கப்பட்ட 400 வருட சியாரத்தை மீலெலுப்ப முடியவில்லை???
ReplyDeleteஒரு கேள்வி எழுகிறது, இவ்வளவு பழைமையான சோனகர்கள் நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதின் காரணம் என்ன? பெருதொகையினராக தொடர்ந்து கொல்லப்பட்டார்களா? பௌத்தத்துடன் ஒரு தொகையினர் கலந்து விட்டனரா? சிங்கள விஜயன் இந்தியாவில் இருந்து
ReplyDeleteலச்சக்கணக்கில் வந்திருக்க முடியாது அப்படியெனில் அதற்கு முன்பிருந்தே வாழ்ந்த வேடுவர்களும் சோனகர்களும் எவ்வாறு சிறுபான்மை ஆகினர், சற்று தெளிவு படுத்தவும். raheemmajeedme@gmail.com