பள்ளிவாசல்கள் - வேலியே பயிரை மேயலாமா..?
(இன்றைய 24-06-2012 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை முன்னிறுத்தி பலரும் பள்ளிவாசல்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிமல்லாதவர்களின் ஆதிக்கத்திலிருந்து நமது பள்ளிவாசல்களைப் பாதுகாப்பது ஒருபுறமிருக்க முஸ்லிம்களாலேயே சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் பற்றியும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் பேசுவதும் காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது.
நாடளாவிய ரீதியாக கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமைய பள்ளிவாசல் நிர்வாகங்களின் நடவடிக்கைகள் காரணமாகவும் அரசியல் தலையீடு உள்ளிட்ட வேறு பல காரணங்களாலும் இன்று பள்ளிவாசல்களின் நிலைமைகள் மிக மோசமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான மாளிகாவத்தை மையவாடிக் காணி தனியார் நிறுவனம் ஒன்றினால் விழுங்கி ஏப்பம் விடப்படும் நிலைமை தோன்றியிருக்கிறது. கல்முனையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு வக்பு செய்யப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் காணியை அதன் தலைவரும் செயலாளரும் இணைந்து தந்திரமாக விற்று பணம் சம்பாதித்திருக்கிறார்கள். புத்தளத்தில் தமிழ் சகோதரர் ஒருவரால் பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியை அதன் தலைவர் தனது பெயரில் பதிவு செய்து விற்றுக் காசாக்கியிருக்கிறார். காத்தான்குடியில் பள்ளிவாசல் ஒன்றுக்கு நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு தேர்தல் நடத்தும் அளவுக்கும் வேட்பாளர்கள் தமக்கு ஆதரவளிக்குமாறு கோரி பிரசாரம் செய்யுமளவுக்கு நிலைமை மோசமடைந்து சென்றிருக்கிறது. வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு பொலிஸ் பாதுகாப்பு கூட வழங்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன விடயங்கள் சில உதாரணங்கள்தான். ஆனால் இவ்வாறான நூற்றுக் கணக்கான சம்பவங்கள் நாடெங்குமுள்ள அல்லாஹ்வின் இல்லங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
பள்ளிவாசல்கள் என்பன வெறுமனே வணக்க வழிபாடுகளுக்கான தலங்கள் மாத்திரமன்றி இஸ்லாமிய மத்திய நிலையங்களுமாகும். இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாசல்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் மகத்தானவை. ஆனால் இன்று பள்ளிவாசல்கள் தொழுகைக்காக மாத்திரம் திறந்து மூடப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் பள்ளிவாசல்கள்தான் அந்த மக்களை வழிநடத்துகின்ற பிரதான நிறுவனங்களாக விளங்குகின்றன. ஆனால் இலங்கையில் பள்ளிவாசல்கள் மக்கள் மத்தியில் பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் வித்திடுகின்ற நிலையங்களாக மாறி வருவது கவலைக்குரியதாகும்.
பள்ளிவாசல்களில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக முஸ்லிமல்லாதவர்கள் கூட தலையீடு செய்ய வேண்டிய நிலை தோற்றம் பெற்று வருகிறது. நீதிமன்றங்களில் பள்ளிவாசல்கள் தொடர்பான ஆயிரக் கணக்கான வழங்குகள் தேங்கிக் கிடக்கின்றன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் வக்பு சபைக்கும் பள்ளிவாசல்களின் நிர்வாகப் பிரச்சினைகள் பெரும் தலையிடியாக மாறியிருக்கின்றன.
ஆக மாற்று மதத்தவரிடமிருந்து பள்ளிவாசல்களைப் பாதுகாக்க முழு வீச்சில் முயற்சிப்பதைப் போன்றே நமது கைகளில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகங்களை சிறப்புற முன்னெடுப்பதற்கும் முஸ்லிம் சமூகம் தீவிர கரிசனை காட்ட முன்வர வேண்டும். பள்ளிவாசல் சொத்துக்களைப் பாதுகாத்து அவற்றை சமூக முன்னேற்றப் பணிகளுக்குச் செலவிடுவதற்கான திட்டங்கள் உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிறுவனங்களாகவன்றி மக்களை சகல வழிகளிலும் மேலோங்கச் செய்வதற்கு வழிகாட்டுகின்ற மத்திய நிலையங்களாக நமது பள்ளிகள் மாற்றம் பெற வேண்டும். நாடெங்கும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்களுக்கிடையில் வலையமைப்பு ஒன்றை உருவாக்கவும் அதன் மூலமாக சமூகத்தைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்கவும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்பட்சத்திலேயே தம்புள்ளையிலும் குருநாகலையிலும் பள்ளிவாசல்களைப் பாதுகாப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் அர்த்தபூர்வமானதாக அமையும்.
இல்லையேல் நாமே நமது பள்ளிவாசல்களை சீரழிப்பதற்கான வாயில்களைத் திறந்து கொடுத்த பெரும் பாவத்தையும் பழியையும்

பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்களைப் பற்றி திருமறையில் அழகாக சொல்லிக்காட்டியிருக்கிறான் .அதற்கே பயப்படாதவன் மனிதசட்டதிற்கா பயப்படப் போகிறான்.பள்ளி சொத்தில் வாழ்க்கை நடாத்துபவர்கள் எவ்வித கூச்சமுமின்றி சமுகத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ReplyDeleteMeraan
There are many more qaafirs enemies also could read this konjam adakki aathaarattudan emakku mattum prasurikkavum
ReplyDelete