Header Ads



மட்டக்களப்பு . கொழும்பு வீதியில் விபத்து - இரு முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தாகினர்

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் உள்ள சத்துருக்கொண்டான் எனும் இடத்தில் செவ்வாய்கிழமை  மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் வபாத்தாகினர்.

ஏறாவூர் சத்தாம் ஹுசைன் கிராம வாசிகளான அப்துல் சமத் வயது 24 மற்றும் அவரது சகோதரர் முஹம்மத் சாலி வயது 34 ஆகியோரே வபாத்தாகினர்

மேற்படி இரு சகோதர்களும் மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொணடிருக்கும் போது எதிரே வந்த காரொன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்தது. ஸ்தலத்திலேயே மேற்படி இருவரும் உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைய்ஹி ராஜியூன்
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.