பிள்ளையானை குற்றம் சுமத்துகிறது முஸ்லிம் காங்கிரஸ் - மறுக்கிறார் ஆசாத் மௌலானா
GTN
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக இராணுவத்தினரின் ஆதரவை பிள்ளையான் பெற்றுக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுக்கு இராணுவத்தினர் ஆதரவளித்து வருவதாக வெளியான தகவல்கள் உண்மையா என்பது எமக்குத் தெரியாது எனவும், அவ்வாறு உண்மையென்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், பிள்ளையானின் ஆட்கள் முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு போதியளவு ஆதரவாளர்கள் இருப்பதாகவும் இராணுவத்தினரைக் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சி ஓர் ஜனநாயகக் கட்சி எனவும், சரியான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

பிள்ளையான் எப்படியும் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு முன்னர் செய்தது போன்று பல அடாவடித்தனங்களைச் செய்வார்.
ReplyDeleteஅவரின் பிறப்பில் ஊறியது கொலை, கொள்ளை, அடாவடித்தனங்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க பல அப்பாவி ஜனாஸாக்களை முஸ்லிம் சமூகம் சுமக்க வேண்டி வரும். முஸ்லிம்களின் உடைமைகளும் எரிக்கப்படும். இராணுவமும் சீண்டிவிடப்படும்.
நமது முஸ்லிம் கட்சிகளுக்கு வெட்கமில்லை. அவர்களிடம் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படாது. இந்த முறையும் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்ப்பார்கள்.
உலக முஸ்லிம்களுக்காக நாம் குரல் கொடுப்போம். பாலஸ்தீனர் களுக்காகக் குரல் கொடுப்போம். உலக ஒற்றுமைக்காக துவாச் செய்வோம்.
நமக்கு ஒற்றுமை தேவையில்லை. முன்னர் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்ததுபோல, இம்முறையும் செய்வோம்.
எமது மக்களின் சீரழிந்த வாழ்விற்கு, இந்தக் கேடு கேட்ட முஸ்லிம் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் செய்யும் சேவைகள் பலே பலே!
panam pathalam varai payum inth panathukkaha namazu arasiyal vazihal muslim samoohaththai padukulikku ittuch selhirarhal eththanayo masjidhaluku ethiraha pala pirachchinaihal anuradhapuram dambulla kurunegala dehiwalaj innumpala ithaiyellam marandu namazu arasiyalvazihal kilakku muzalamaichar pazavi aasai vandullazu kadantha therzalinpozu muslimgal kooduthalana aasanam petrum muzalamaichar pazaviya thavaravittarhal pinnar arasangathai thootrinarhal pazavihalai rajinama seiwazaha sonnarhal athellam enna nadanduthu meendum athepaniyel kilakku muzalamaichar kanal neera? Intha arasiyalvazihalai nambazeerhal avarhalin poi vakuruziyey kettu eamazareerhal sinthiththu seyalpadungal
ReplyDeleteபிள்ளையான் ராணுவத்தை கொண்டு வெல்ல வேண்டிய அவசியம் இல்லை...... நமது மாமாக்களான அதாஉல்லா,ஹிஸ்புல்லா,திடீர் தௌபீக்,றிசாத் பதியுதீன்,நௌசாத்,மற்றும் காத்தான்குடி,அக்கரைப்பற்றின் மைந்தர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து பிள்ளையான் அவர்களை இரண்டாவது முறையாகவும் முதல் அமைச்சராக தெரிவு செய்வர்..........
ReplyDeleteAppo kalmuna maamiyaarkalum mainthirikalum vanthu sirappikalaam
ReplyDelete