Header Ads



வன்னியில் விடுதலை புலிகளின் 6.500 கிலோ வெடிபொருடக்ள மீட்பு


இலங்கையில் உள்நாடு யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளில் மிக அதிகமான அளவில் பதுக்கிவைக்கப்பட்ட வெடிப்பொருட்களை தாங்கள் இப்போது கண்டெடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

தற்போது ஆயிரக்கணக்கான கிலோக்கள் எடையுள்ள சி4 ரக வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இவை விடுதலைப் புலிகளால் பதுக்கிவைக்கப்பட்டவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் வடக்கே உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட சண்டைகளும் உக்கிரமான மோதல்களும் நடந்த இடங்களில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் கண்டெடுத்ததாக பாதுகாப்பு படைகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.

ஆனால், தற்போது கிடைத்ததுதான் இதுவரை கிடைத்ததிலேயே மிக அதிகமான மறைத்துவைக்கப்பட்ட வெடிப்பொருட்கள் என்று கூறப்படுகிறது.
வெளியில் இருந்து கிடைத்த ஒரு துப்பு தகவலை அடுத்து பொலிசார் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்ததிருந்தனர்.

ஆறாயிரத்து ஐநூறு கிலோ எடையளவுக்கு பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்ட சி4 ரக வெடிப்பொருட்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அருகில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரின் இந்தக் கூற்றை தான் சற்று ஐயத்துடனேயே பார்ப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். இவ்வளவு அதிகமான வெடிப்பொருள் தொகுதி ஒன்று இத்தனைக் காலமாக கண்டுபிடிக்கப்படாமல் போனது ஏன் என்று அவர் கேட்கிறார்.

ஆனால் இந்தக் கூற்று உண்மையானதுதான் என்று தான் நிச்சயம் கருதுவதாகவும், இந்த வெடிப்பொருட்கள் எல்லாம் பாலிதீன் உரைகளில் போடப்பட்டு நிலத்துக்கு அடியில் ஆறு மீட்டர்கள் ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன என்பது உண்மைதான் என்று தான் நம்புவதாகவும் வேறு ஒரு பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

டி.என்.டி போன்ற அதிக சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களைக் காட்டிலும் சி4 ரக வெடிப்பொருட்களையே அதிகம் பயன்படுத்திவந்தனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். bbc

No comments

Powered by Blogger.