Header Ads



கல்முனை மாநகர முத்துக்கள் - 275 மாணவர் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)

எம்.வை.அமீர்

கல்முனை மாநகர வரலாற்றில் முதற்தடவையாக கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டின் கீழ் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா இன்று (2012-05-25) மாலை 3.30 மணிக்கு சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் அமைக்கப்பட்ட விசேட அரங்கில் ஆரம்பமானது.

கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய தலைவருமான றாஊப் ஹகீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக பிரதி அமைச்சர் வசிர் சேகு தாவுத் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,ஹசன் அலி போன்றோரும் மாகாண சபை உறுப்பினர்களான இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் எ.எம்.ஜமீல்,மஜீத் போன்றோரும்  பிரதி மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் ஏனைய கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் பரிட்சையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களும்,கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் 9A புள்ளிகளை பெற்ற மாணவர்களும் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தில் சிறந்த அடைவுகளை பெற்ற மாணவர்களும் கௌரவிக்ப்பட்டது விசேட அம்சமாகும்.

மொத்தமாக 275 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் 85 தமிழ் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டது சமூக ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

சாதனையாளர்களான மாநகரின் முத்துக்கள் கௌரவிக்கப்படும இந்த அரங்கில் கல்முனை மண்ணின் பழம்பெரும் அரசியல் வாதியும் முன்னாள் மாநகர மேயருமான மசூர் மவ்லானா அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் அன்டனி ஜெயராஜ் மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகவடிவில் வெளிட்டார். இப்பிராந்திய முன்பள்ளி மற்றும் ஏனைய மாணவர்களால் கலை நிகழ்வுகளும் அரங்கேறின.












No comments

Powered by Blogger.