பொஸ்னியாவில் 20 வருடங்களுக்கு முன் வபாத்தான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மீட்பு
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பொஷ்னிய முஸ்லிம் இனத்தவர்கள் 66 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொஷ்னியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதுடன் தலை துண்டிக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பொஷ்னிய சேர்பிய யுத்தத்தின்போது இடம்பெற்ற இந்தக் கொலைகள் இனப்படுகொலைகள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் படுகொலைகளுடன் பொஷ்னி சேர்ப் முன்னாள் இராணுவத் தளபதி ரட்கோ ம்லடிச்சும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ரட்கோ ம்லடிச் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.
பொஷ்னிய சேர்பிய யுத்தத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment