இலங்கையில் 20.2 மில்லியன் மக்கள் தொகை - 15 இலட்சம் முஸ்லிம்கள்..?
இலங்கை மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபர மதிப்பீட்டுத் திணைக்களத்தால் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தற்போது இலங்கையில் 20.2 மில்லியன் மக்கள் வாழ்வதாக உத்தியோகபூர்வ வட்டாரத் தகவல்கள் நேற்று தெரிவித்துள்ளன.
இம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தற்போது இலங்கையில் 14.9 மில்லியன் பேர் சிங்களவர்கள் ஆவர். கடந்த முப்பது ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக இலங்கை தீவு முழுமையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் ஆண்டுதோறும் எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பில் மேலும் 220,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன் படி, 2041ல் இலங்கை தீவின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 24 மில்லியனாகக் காணப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கில் 997,754 பேர் காணப்படுவதாகவும், இதில் 934,392 பேர் தமிழ் மக்கள் எனவும் இக் கணக்கெடுப்பின் மூலம் அறியமுடிகின்றது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 21,860 சிங்களவர்களும், 32,659 முஸ்லீம்களும் வாழ்கின்றனர்.
இலங்கையில் வாழும் 1.5 மில்லியன் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கணக்கெடுப்பின் இறுதிப் பெறுபேறுகள் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும். முதலில் இலங்கை தீவின் முழுமையான கணக்கெடுப்பு தொடர்பான பொதுவான தகவல்கள் மற்றும் மற்றும் குடும்ப எண்ணிக்கைகள் போன்றன வெளியிடப்படும். இரண்டாவதாக பொதுவான ஏனைய தகவல்கள் வெளியிடப்படும். இணையப் பாவனைகள் மற்றும் குடியகல்வுடன் தொடர்புபட்ட விடயங்கள் மூன்றாவதாக வெளியிடப்படும் என குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக இயக்குனர் நாயகம் D.C.A.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
2011 கணக்கெடுப்பில், தேசிய அடையாள அட்டை இலக்கம், குடியகல்வுக்கான காரணம், தொழில் விடயம், வாழ்க்கைத் திறன் சார் தகவல்கள் மற்றும் கணிணி அறிவுத் திறன் போன்ற புதிய விடயங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

So it means we are 6.7%...Do you believe?
ReplyDeletenawa
It is unbelievable. Before Muslims were 8%. After many years of childbirth etc are they reduced to 6.7%. Unofficial estimates says that it is 2 million and amounted to 10%.
ReplyDeletePlease do the needful
மேற்சொல்லப்பட்ட தரவுகளில் எங்களுக்கும் சந்தேகம் நிலவுகிறது. எனவேதான் நாங்களும் ''இலங்கையில் 15 இலட்சம் முஸ்லிம்கள்'' என்று கேள்விக்குறியும் இட்டுள்ளோம்..!
ReplyDeleteமுஸ்லிம்கள் தரப்பில் ஏற்படுத்தப்படும் பலம்பொருந்திய கட்டமைப்பு ஒன்றினூடாகவே இலங்கை முஸ்லிம்களின் உண்மையான சனத்தொகையை கணக்கிட முடியுமென்பது எமது நம்பிக்கை.
அஸ்ஸலாமு அழைக்கும் எனது அபிப்பிராயம் எனவேண்டறால் ஒவ்வொரு பள்ளியினாலும் அதன் ஜமாஅத் இனரின் விபாரம் எடுத்தல் சரியாக இருக்கும்
ReplyDeleteThis is 100% forge calculation.
ReplyDeleteWe can't accept this.
So muslims people please think about this.
அதிகமாக காட்டினால் இன்னும் பள்ளி வாசல்களை கட்டிவிடுவோம் என பயந்து குறைத்துக்காட்டியிருப்பார்கள்.பூமியில் மல,சல கூடம் தவிர்ந்த எந்த இடத்திலும் தொழுவதை எவனாலும் தடுக்க முடியாது.அரசே பயப்பிடாமல் உண்மையான கணக்குகளை வெளியிடுங்கள்.அனேகமாக தமிழர்களும்,முஸ்லீம்களும் ஒரே விகிதத்தில் இருக்கலாம்,ஏனெனில் 35 / 40விகிதமானோர் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.கணக்கு விபரம் சரியா
ReplyDeleteதெரிந்தவர்கள் எழுதுங்கள்.
Meraan
ஏன் ஜம்மியத்துல் உலமா அல்லது முஸ்லிம்களின் பால் நன்னோக்கு கொண்ட ஒரு அமைப்பினால் தம் சமூகத்தின் நலன் கருதி பிற தேவைகளுக்குமாக(ஏதாவது அரச சார்பற்ற நிறுவன உதவிகளுடன் இவ்வாறானதொரு முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான தகவல்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள முடிவதில்லை.
ReplyDeleteIna suththiharipukku munnoadi nadawadikkai..!!..
ReplyDeleteKanakule varala ye, List la ye peyar illaye 'nndu solla vasadhiya irukkumey'' nda oru eatpaadu thaan :O
Hi to Every body!
ReplyDeleteEvery Jumaah Masjids can make the calculation accurately. we must do every thing through the Masjids. when will we utilize our Ummah's House to do all?
பின்னால் ஒரு இனக்கலவரம் வந்து விட்டால் , கொல்லப்பட்ட மக்களின் தொகையை மூடி மறைப்பதற்கான சதி முயற்சியே இது ...
ReplyDeleteஆகவே, ஒவ்வொரு பள்ளியினாலும் தத்தமது மகல்லா வாசிகளின் சரியான எண்ணிகையை சேகரிப்பதன் மூலம் , ஓரளவு சரியான விபரத்தை அறியலாம்...
அது தான் ஒன்னுக்கு ரெண்டு ஜம்மியத்துல் உலமா இருக்கே.. யாராச்சு முன்னெடுத்து செய்யுங்க....
muhammath