Header Ads



தெஹிவளை பள்ளிவாசலுக்கு அமைச்சர்கள் விஜயம் - 1995 முதல் தொழுவதற்கு அனுமதி உண்டு



கொழும்பிலிருந்து இர்ஷாத் ரஹ்மத்துல்லா

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகையினை நிறுத்த வேண்டும் என பெரும்பான்மை மதகுருக்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் திங்கட்கிழமை அங்கு சென்ற அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி,றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியதுடன்,ளுஹர் தொழுகையினையும் அங்கு  நிறைவேற்றியுள்ளனர்.

தெஹிவளையில் இயங்கி வந்ந பிரஸ்தாப மத்ரஸா 1995 ஆம் ஆண்டளவில் பதிவு செய்யப்பட்டு்ள்ளதுடன்,தொழுகையினை நடத்துவதற்கான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தாக  அங்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

தாமும், அமைச்சர் பௌசி உட்பட அதிகாரிகள் தெஹிவளை தாருர் ரஹ்மான் மத்ரஸாவுக்கு விஜயம் செய்து பள்ளி நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். பின்னர் சர்ச்சைக்குரிய பெரும்பான்மை மதத் தலைவர் தலைமையில் வந்த குழுவினருடன்,எமது தரப்பு நியாயங்களையும்,இதனது தெளிவினையும் எடுததுரைத்தோம்.

அதனை அந்த மதகுரு தலைமையிலானவர்கள் ஏற்றுக்  கொண்டு அங்கிருந்து அகன்று சென்றதுடன்,மதக் கடமைகளை நிறைவேற்ற எந்த தடையினையும் தாங்கள் ஏற்படுத்தப் போவதில்லையென்றும் கூறி்னர்.

அதே வேளை தொடர்ந்து பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்து பேசி சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கூறினார்.

4 comments:

  1. May almighty Allah help you all.

    ReplyDelete
  2. பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க எமது அமைச்சர்கள் முன்வந்தால் பொதுமக்கள் இவற்றில் தொடர்புப் பட்டு பாதிக்கப்படாது பாதுகாக்கப்படுவார்கள்.ஒரு சில வெறியர்களின் எதிர்ப்புக்காக முழு சிங்கள சமூகத்தையும் எதிர்க்கும்படி நாம் நடந்துகொள்ளவோ, கருத்துக்களை வெளியிடவோ கூடாது. மகிந்தவின் அரசு இனவாதிகளின் தயவில் ஆட்சி நடத்தவேண்டியேற்பட்டதால் இவ்விடயங்கள் பற்றி வாய் திறக்க தயங்குகிறார். அபூ சிஜா

    ReplyDelete
  3. அமைச்சர்களே இது நல்ல முயற்சி அல்லாஹ் உங்களுக்குகு பாதுகாப்பு தருவானாக ஆமீன்-

    ReplyDelete
  4. May be Rishard Badiudeen eligible for All Ceylon Muslim Chif minister who ever try the best would achieve the goal where are you all other Co-Op party Muslim Ministers so call Congresssssssssseeeessss

    ReplyDelete

Powered by Blogger.