Header Ads



சிம்பாப்வே நாட்டில் 170 எம்.பி.க்கள் 'சுன்னத்' (கத்னா) செய்ய முன்வருகை

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர்.

ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்' செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. சுன்னத் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்து கொள்வது ஒரு அமல் ஆகும்.
    நபிகளாரின் சுன்னத்தைப் பின்பற்றி முஸ்லிம்கள் கத்னா செய்துகொள்கின்றார்களே தவிர,
    எயிட்ஸ் வராமல் பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக அல்ல.


    எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அனைத்தும் என்பதற்கிணங்க, காபிர்கள் பல்வேறு லோகாயுத காரணங்களுக்காக செய்து கொள்வதை சுன்னத் என்று சொல்ல கூடாது. விருத்தசேதனம் என்பதே பொருத்தமான வார்த்தை ஆகும்.

    ReplyDelete
  2. yes VIRUTHASETHANAM....islam eatkanave sonnathu ipo ivangaluku puriuthu.nabihalarin anaithu varthaelum eatho oru rtham irukkum.aana ithallam therinjirunthum islathai eatka munvaramal irupathu ean?????

    ReplyDelete

Powered by Blogger.