Header Ads



'யாழ்ப்பாண முஸ்லிம்களை வேறருக்கும் திட்டம்' - (பகுதி 01)

* யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊடகப் போர்
* அழிவின் விளிம்பில் யாழ் முஸ்லிம் வட்டாரம்
* பாதுகாக்கப்போவது யார்..?

இப்னு அய்யூப்

இந்தக்கட்டுரை 2010 ஆகஸ்ட் முதல் 2012 மே மாதம் வரை களத்தில் இருந்து பலதரப்பட்ட சமூக நடவடிக்கைகளை முன்னெடுத்து, பலதரப்பட்ட சவால்களை எதிர்கொண்டு, எமது யாழ் முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்கான ஒரு இலக்குடைய காத்திரமான கருத்திட்டத்தையும், அதனை அமுலாக்கும் செயற்திட்டத்தையும் கொள்கை அளவில் ஒழுங்குபடுத்தி அதனை அமுலாக்கம் செய்வதற்கான ஆரம்ப நிலையில் இருந்துகொண்டு வரையப்படுகின்றது.

அன்பு நிரைந்த சொந்தங்களே! கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உரித்தானது, அது ஒரு உம்மத்தின் விடியலுக்கான வேர்களை அறுக்கும் கரையான்களாக மாறிவிட்டால், அத்தகைய கருத்துச் சுதந்திரம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். எனவே உங்கள் கருத்துக்களை இங்கே நான் முன்வைக்கும் கருத்துக்களோடு மோதவிடுங்கள், தவறான கருத்துக்கள் நிச்சயம் திருத்தியமைக்கப்படும். ஆனால் வீணான சந்தேகம் கொண்டு அல்லது காழ்ப்புணர்வுகொண்டு உங்கள் ஆத்திரங்களை கொட்டித்தீர்க்கும் அமைப்பில் கருத்திடுகைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

1990களுக்கு முற்பட்ட எமது சமூகம் சார் அனுபவங்களில் நாம் எமக்கு பயனுறுதி வாய்ந்த விடயங்களை மாத்திரம் சுமந்துகொள்கின்றோம், 1990 வெளியேற்றம் முதல் 2009 யுத்த நிறைவு வரையான 20 வருடங்களின் இடைவெளிகளில் நடந்து முடிந்த அழிவுகள், நாசங்கள், சூறையாடல்கள் எல்லாம் பேசுபொருளாக மாத்திரமன்றி வேறெதற்கும் உதவாது என்பது எனது எண்ணம், எனவே இத்தகைய ஒரு மனோநிலையுடன் 2009 களில் யாழ் மண்ணை நான் புதிதாய்ப் பார்க்கின்றேன்.

எங்கும் இடிபாடுகள்,சிதைவுகள், வறுமையின் எல்லைகளில் நடக்கும் மக்கள், சீரான தொழில் வாய்ப்புகள் இல்லாத இளைஞர் கூட்டம், தூசுகளால் நிறைந்த எமது முஸ்லிம் வட்டாரத்தின் வீதிகள், வறுமையின் கண்ணாடிகளாய் சிறார்கள், வாழ்வைத் தொலைத்த பெண்கள், எப்போதாவது விடியல் வருமா என்று எண்ணியே காலத்தை கழித்த எமது பெரிசுகள், என எம் கண்களுக்கு ஒரு அவலம் காட்சியளித்தது.

அன்றைய திகதியில் சமூகப் பெரியவர்கள் தலைவர்கள் என்றிருந்தவர்களை அணுகி விசாரித்த போது, இப்போதுதான் மக்கள் வரத்தொடங்கியிருக்கின்றார்கள், அவர்கள் முழுவதுமாக வந்த பின்னர்தான் ஒரு சீரான திட்டத்தை நாம் அமுல்படுத்தலாம்; என்றார் ஒரு சுயேட்சை அரசியல்வாதி, இன்னுமொரு யானைக் கட்சிப் பிரமுகரிடம் விசாரித்தபோது முஸ்லிம்கள் வருவார்கள் என்று நம்பமுடியாது, எல்லோரும் தென்னிலங்கையில் செட்டில் ஆகிவிட்டார்கள், வருபவர்களுக்கு இப்போது எம்மிடம் வசதிகள் இருக்கின்றன, நாங்கள் பார்த்துக்கொள்வோம், இங்கே நடக்கும் எல்லா அபிவிருத்திகளும் எம்மூடாக நடந்தால் சிறப்பானதாக இருக்கும் என்றார் அவர்.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்துகள் நிலவின, ஆனால் எவரிடமும் யாழ் முஸ்லிம் சமூகத்திடம் மீள்குடியேற்றம் குறித்த தெளிவான பார்வைகளும் கருத்திட்டங்களும் இருக்கவில்லை, இதற்கிடையில் என்.ஜீ.ஓ வியாபாரிகள் யாழ்ப்பாணத்தை குறிப்பாக முஸ்லிம் வட்டாரத்தை மோப்பம் பிடிக்கத்தொடங்கிவிட்டார்கள், சமத்துவம் என்றும், மனித உரிமைகள் என்றும், நல்லிணக்கம் என்றும், சகவாழ்வு என்றும் அவர்களது கருத்திட்டங்கள் வித்தியாசமான கோணங்களை நோக்கியிருந்தது.

2010 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 406 ஆகும், அதிலே இங்கே வசித்த குடும்பங்களின் எண்ணிக்கை 196 ஆகும். 1990 களுக்கு முன்னர் 4,000 குடும்பங்கள் வாழ்ந்த எமது மண்ணில் 10 வீதமான குடும்பங்கள் மாத்திரமே குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டிருந்தனர், இது எம்மை மிகவும் ஆழமாகச் சிந்திக்க வைத்தது. மீள்குடியேற்றம் இவ்வாறாக மந்தகதியில் இருப்பதற்கான காரணி யாது என ஆராய்ந்தோம்.

இதற்கிடையில் 2010 ஒக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இயங்கு நிலையில் இருந்த ஒரு சில அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் யாழ் முஸ்லிம்களின் 20 வது வருட வெளியேற்றத்தை குறிக்கும் நிகழ்வொன்று முஸ்லிம் வட்டாரத்தில் பிரமாண்டமான அமைப்பில் நடாத்தப்பட்டது.

அப்போது குறிப்பாக இரு சாரார் வெளியில் இருந்த நிலையில் இந்நிகழ்வை விமர்சித்தார்கள், பங்களிப்பு வழங்க மறுத்தார்கள். அவர்களை அணுகி தாங்கள் விலகி நிற்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்களது பதில்கள் வினோதமாக இருந்தன, அரசியல் முரண்பாடுகள், சமூக முரண்பாடுகளுக்கு அப்பால் சென்று அவர்கள் புதுவிதமான முரண்பாட்டு அடையாளத்தை முன்வைத்தார்கள் அவர்கள் சொன்னார்கள் “நாங்கள் 1998கள் முதல் இந்த மண்ணில் படாத பாடுபட்டு முஸ்லிம்களின் பூகோள அடையாளங்களைப் பாதுகாத்திருக்கின்றோம், வெளியில் இவ்வளவு காலமும் சொகுசாக இருந்துவிட்டு இப்போது இங்கே வந்து நினைவுதினம் நடாத்த இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன?” இதுதான் முரண்பாட்டிற்கான காரணம்.

மீள்குடியேற்றத்திட்டம் குறித்து சிந்திக்க்க முன்னர், எமக்கிடையே ஏற்கெனவே வேறூண்டியிருக்கும் வேறுபாட்டுக் காரணிகளுடன் புதிதாக இன்னும்பல பாகுபாட்டு காரணிகள் உருவாகிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது, இதனைத்தடுக்க வேண்டும். எம்மவர்களிடையே உடன்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய முயற்சியின் வெளிப்பாடே “யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்”.

2011 ஜனவரி முதல் 2011 டிசம்பர்வரை சம்மேளனத்தில் யாழ் முஸ்லிம் சமூகத்தின் முழுமையான மீள்குடியேற்ற செயற்திட்டம் குறித்து சிந்திப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இருப்பினும் அத்தகைய செயற்திட்டங்களுக்கு எவ்வித ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. சம்மேளன அங்கத்தவர்கள் ஒருசிலர் சம்மேளனத்தை யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் புதிய அதிகார மையமாக எண்ணி அதன் உயர் பீடங்களை எவ்வாறு கைப்பற்றலாம் என்றும், காத்திரமான எந்தத் திட்டத்தை முன்னெடுப்பதை விட்டு வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் நடந்துகொண்டார்கள், இதன் விளைவாக இதுவரை “யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்திற்கான எவ்விதமான காத்திரமான முழுமையான திட்டமிடல்” இன்றிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் எமது ஆழமான வாசிப்புகள், ஆய்வுகள், பொது உறவுகளின் பிரகாரம் “யாழ்ப்பாண முஸ்லிம்களை வேறருக்கும் திட்டம்”  குறித்து நாம் கண்டுகொண்டோம். 1990களில் புலிகள் எம்மை வெளியேற்றியமையானது சடுதியாக நிகழ்ந்த ஒரு விடயம் அல்ல மாறாக அது தமிழ்த்தீவிரவாதத்தை விடவும் கிறிஸ்தவ மேலாதிக்க சக்திகளே இதன் பின்னால் இருந்தமை தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றது. ஈழப்போராட்டத்தை நன்கு வாசிக்கின்ற ஒருவர் ஈழப்போராட்டத்தின் ஆணிவேர்களுக்கும் கிறிஸ்தவ திருச்சபைக்கும் இருக்கின்ற தொடர்புகளைக் கண்டுகொள்வார்கள், எனவே இந்துத்துவம் என்பதைவிட கிறித்தவம் மேலோங்கிய நிலையிலேயே ஈழப்போராட்டம் முன்கொண்டு செல்லப்பட்டது. எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் கிறிஸ்த்தவத்துக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

தற்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஊடகப் போர், முஸ்லிம் சமூகம் யாழ்ப்பாணத்தில் அழிவு நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றது, என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த விளைகின்றது. யாழ் வர்த்தக சமூகத்தின் நடவடிக்கைகள், அரச இயந்திரங்களில் காட்டப்படும் பாரபட்சம் என்பன எங்களுக்கு ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றன, அதாவது யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் மீது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிடலுடன் கூடிய எதிர் நடவடிக்கைகள் செயற்பாட்டில் இருக்கின்றன என்பதுவே அந்தச்செய்தியாகும்.

திட்டமிடலற்ற தமக்கிடையில் மோதிக்கொள்கின்ற ஒரு பலவீனமான யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம், திட்டமிடலுடன் கூடிய ஒரு பலமான எதிர் நடவடிக்கையினை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதுவே எமது வினாவாகும். ஒரு மகத்தான அழிவிலிருந்து யாழ் முஸ்லிம் வட்டாரத்தையும், முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாக்கப்போவது யார்?

இப்போது எழுதுங்கள் எமது சமூகத்திலிருந்து ஒருவன் உதவி மேயராக வருவான்: அவனைப்பற்றி அவதூறாக எழுதுங்கள். எமது சமூகத்தில் சேவையாற்ற ஒரு கிராம சேவையாளன வருவான் அவனை கிராமநாசகன் என்று வரைவிலக்கணப்படுத்துங்கள், அவன் ஜமாஅதே இஸ்லாமி, இவன் தப்லீக் என்று கூறுபோடுங்கள், எல்லா நல்ல காரியங்களையும் சந்தேகத்தோடு நோக்குங்கள், இங்கே களத்தின் வேதனைகள் தெரியாமல் புரியாமல் ஏ.சீ ரூம்களுக்குள் இருந்துகொண்டு விமர்சித்து தள்ளுங்கள்.

 ஆநாமேதையப் பெயர்களில் துண்டுப்பிரசுரம் வெளியிடுங்கள். இன்னும் இன்னும் எவ்வளவு எங்களது சமூகத்தை துண்டாட முடியுமோ அத்தனையையும் செய்யுங்கள். அறுதியிட்டு கூறுகின்றோம் “யாழ் முஸ்லிம் சமூகத்தில் பிளவுகளையும் நாசங்களையும் விளைவிக்கும் உங்கள் கருத்துக்கள், மனோநிலைகள், செயற்பாடுகள் நிச்சயம் மறுமை நாளில் ஒரு சமூகத்தை அழித்த குற்றத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.”

தோழர்களே..! சற்று சிந்தியுங்கள் எமது சமூக விடுதலை, விமோசனம் உங்களது ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தங்கியிருக்கின்றது...!

(இன்னும் வரும்)




6 comments:

  1. Imran

    வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டுள்ள சில தமிழ் இணையதளங்களும், பத்திரிகைகளும் முஸ்லிம்களுக்கெதிரான கீழ்த்தரமான , ஊடக தர்மத்தை மறந்து செயற்பட்டு வருகின்றது,
    அந்த வரிசையிலே ............ எனும் புலிகள் சார்பான இணையதளம் சில நாட்களாக யாழ் குடாநாட்டிலே நடை பெறுகின்ற கொள்ளைகள், பாலியல் குற்றங்கள் , கட்டாய மத மாற்றங்கள் போன்ற விடயங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக தமிழ் மக்களுக்கிடையிலே வதந்திகளை பரப்பி அனாவசிய இனமுருகளை ஏற்படுத்துகின்றார்கள்.

    ....... உடைய இன்றைய செய்தியில் "யாழ்.குடாநாட்டில் காணாமல் போகும் சம்பவங்களுக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் தொடர்பா?" எனும் தலைப்பிலே முஸ்லிம்களை மிகக் கேவலமாக சித்தரித்துள்ளார்கள்.

    ஒரு சில தனிப்பட்ட மனிதர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் காரணமாக அமைந்து விடுவதில்லை . இவ்வாறான கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டுவரும் .......... க்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. allah emmodu irukkiraan jamaath pilavukalai viddu onru seruvom.......
    ...(saleem_mohideen)

    ReplyDelete
  3. கட்டுரையாளரின் ஆதங்கம் அவர் எழுத்தில் தெரிகிறது.புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டார்களா?நமக்கு நாமே எழுதிக்கொண்டிருக்காமல், அனைத்து ஊடகங்களுக்கும் உண்மையை தெளிவுபடுத்துங்கள் .
    புதிது புதிதாக இணையங்களை திறந்து நம்மை நாமே கழுவிக்கொண்டிருக்காமல் சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முன் வாருங்கள்.
    எல்லோரும் தலைவர்களாக வர ஆசைப்பட்டால் ,406
    குடும்பங்களுக்கும் 40 தலைவர்கள் வந்துவிடுவார்கள்.தயவு செய்து யாழில் இருந்து உண்மைச் செய்திகளை எதிர்பார்க்கிறோம்.நன்றியுடன்.
    Meraan

    ReplyDelete
  4. Don't worry good qaafirs knew about all Muslim and our way of living you cannot get independent by killing looting cleansing card cloning smuggling lying cheating betraying and frauding always breaking the promises and blood hungry these all existing. among those bad Tamil but we have to consulting KarunaAmman about these evils motivation

    ReplyDelete
  5. குறித்த ஆக்கம் எமது சிந்தனைகளைத் தட்டிவிடும் விதத்தில் அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது வெறுமனே யாழ்ப்பாண முஸ்லிம்களினால் மாத்திரம் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றல்ல, மாறாக அது இலங்கை முஸ்லிம் உம்மத்தினதும் கடமையாகும்.இவ்வாறான ஆக்கங்களை எழுதுபவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்களைப் பேசக்கூடிய தேசிய முஸ்லிம் அரங்குகளுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது, இலங்கை முஸ்லிம் வானொலி சேவை, மற்றும் முஸ்லிம் ஊடகங்களில் குறித்த விடயத்தை முதன்மைப்படுத்துவது பொறுத்தம், எமது ஒத்துழைப்புகள் தொடர்ந்தும் அவர்களுக்கு இருக்கும்.
    உனைஸ்- மாவனல்லை

    ReplyDelete
  6. சகோதரர் உனைஸ், உங்கள் புரிந்துணர்வுக்கும், ஆர்வமூட்டலுக்கும் நன்றி.

    இலங்கை மொத்த முஸ்லீம்களின் பங்களிப்பும் மீள்குடியேற்றம் விடயத்தில் அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.