Header Ads



அவுஸ்திரேலியாவின் கல்வி முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்துவது பற்றி ஆராய்வு

நாட்டிலுள்ள அநேகமான உயர்கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வழங்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உயர்கல்வி சான்றிதழ்களை சர்வதேச  தரமிக்கவையாக மாற்ற நடவடடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் பொருட்டு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த நாட்டிலுள்ள உயர்கல்வி துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அவ்வாறான கல்வி முறைமைகளை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.