பிரதமரின் அழைப்பை நிராகரித்த முஸ்லிம் கட்சித் தலைமைகள்
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக முடிவொன்றைக் காண்பதற்காக பிரதமர் டி.எம்.ஜயரட்ண கூட்டமொன்றைக் கூட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சியை முஸ்லிம் தரப்பினர் முற்றாக நிராகரித்துவிட்டனர். ஏற்கனவே கடந்த 23 ஆம் திகதி தம்புள்ளயில் கூட்டிய கூட்டத்தை முஸ்லிம்கள் முற்றாக பகிஷ்கரித்ததையடுத்து பிரிதொரு தினத்தில் கொழும்பில் உயர்மட்ட மாநாடொன்றைக் கூட்டுவதாக பிரதமர் அறிவித்திருந்தார்.
இதன் பிரகாரம் அக்கூட்டத்தை கூட்டுவதற்கு ஏற்பாடு செய்து முஸ்லிம் அமைச்சர்கள், ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உயர்மட்ட மாநாட்டையும் நிராகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
பிரதமர் ஜயரட்ண மேற்படி பள்ளிவாசலை வேறிடத்துக்கு மாற்றுவதிலேயே முனைப்புக்காட்டி வருவதால் இதில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என பலரும் சுட்டிக்காட்டியதையடுத்தே நிராகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment