Header Ads



எரிமலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது பிரிட்டன்

பிரிட்டன் தன்னுடைய மின்சாரத் தேவைகளுக்காக ஐஸ்லாந்து தீவுகளில் உள்ள எரிமலையிலிருந்து மின்சாரத்தை பெற முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் சார்லஸ் ஹென்றி ஐஸ்லாந்து தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

புவிவெப்ப சக்தியை மின்சக்தியாக மாற்றும் முறைகளைப் பற்றிப் பேசுவதற்காக ஹென்றி அந்தத் தீவின் அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

இவ்வாறு மின்சாரத்தை பெறுவதற்கு அதிக வோல்ட்டேஜ் (Voltage) உள்ள கேபிள்களை நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு கடலின் தரைக்குக் கீழ் பதிக்க வேண்டும். இதனை இடையிணைப்புகள் Inter Connectors என்று அழைக்கின்றனர்.

அடுத்த பத்தாண்டுகளில் இந்த இணைப்புகள் பிரிட்டனில் இருந்து ஐரோப்பா முழுக்கப் போய்ச் சேரும், ஆப்பிரிக்காவில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவற்றால் எதிர் காலத்தில் ஐரோப்பிய இயற்கை சார்ந்த மின்சக்தி பயன்பாட்டிற்கு வரும்.

இந்த குறைந்த கரியுடைய மின்சக்தியை தயாரிப்பதைக் காட்டிலும் இதனை இடையிணைப்புகள் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு வருவதே கடினமான மற்றும் முக்கியமான பணியாகும் என்று ஹென்றி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.