பள்ளிவாசல் உடைப்பை நியாயப்படுத்தி, அது அகற்றப்படுவதற்காக காத்திருக்கும் பௌத்த தேரர்
தம்புள்ளை பள்ளியை அகற்றப் போவதாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவர் தெரிவித்துள்ள கருத்து சட்டரீதியானது நியாயமானது. பிரதமரரின் கூற்றினை நம்புகின்றோம். அது நிறைவேற்றப்படும் நாளை எதிர்பார்த்துள்ளோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இது பௌத்தர்களின் நாடு. பௌத்தர்களின் காணிகளையும் உரிமைகளையும் சிறபான்மையினருக்கு அபகரிக்க இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் மாட்டோம். அதற்காகப் போராடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தம்புள்ளை பள்ளி விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். எமக்குள்ள ஆதாரங்களை முன்வைத்து வழக்குத் தாக்கல்செய்ய எண்ணியுள்ளோம். எனினும் இது குறித்து இறுதித் தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்பள்ளி விவகாரம் தொடர்பாக மூன்று வருட காலம் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினோம். இப்பேச்சு வெற்றியளிக்காத காரணத்தினால் நேரடி செயற்பாட்டில் ஈடுபட வேண்டியேற்பட்டதென்றும் அவர் குறிப்பிட்டார்.
தம்புள்ளை புனித பூமியில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளியை அங்கிருந்து அகற்றுமாறு கோரி வருகின்றோம். இது தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண நிலைமை குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம்.
பௌத்த விரோத உணர்வுகளை கிளறி விட்டு இந்த விவகாரத்தைமூடி மறைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சி வெற்றியளிக்க இடமளிக்க மாட்டோம் என்றும் சோபித தேரர் கூறியுள்ளார்.
தமிழீழ போராட்டம் என்ற பெயரில் தமிழ் சிறுபான்மையை அடக்கி ஒடுக்கி விட்டார்கள், ஆனால் முஸ்லிம் இனத்தின் மீது கை வைத்தால் பாரிய அழிவை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும்
ReplyDeleteஅல்லாஹு அக்பர் ,,,