Header Ads



கட்டாரில் இருந்து இலங்கை வந்த பெண்களின் வயிற்றினுள் போதைப்பொருட்கள்

கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்ட சர்வதேச போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தாய்லாந்தை சேர்ந்த இரண்டு பெண்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுள் 87 வில்லைகள் கைதான பெண்களின் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும் 17 போதைப்பொருள் வில்லைகள் கைதான பெண் ஒருவரின் பயணப் பொதியினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தாய்லாந்து பெண்கள் இருவரும் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் விமானத்தினுள் சுகயீனமுற்றள்ளதால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அந்த பெண்ணின் வயிற்றினுள் போதைப்பொருள் வில்லைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிவந்துள்ளது.

இந்த பெண்ணின் வயிற்றினுள் இருந்து கொக்கேய்ன் 51 போதைப்பொருள் வில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றைய பெண்ணின் வயிற்றினுள் 36 வில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.