கிழக்கு முதலமைச்சர் பதவி - தீரஆலோசித்த பின்னரே முடிவு - ரவூப் ஹக்கீம் சொல்கிறார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாகவும் தீர ஆலோசிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்க முடியுமென முஸ்லிம் காங்கிரஸ தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வெறும் வதந்திகளுக்காக கிழக்கு முதலமைச்சர் பற்றிய கேள்விக்கு கருத்துக்களை முன்வைக்க முடியாது. பத்திரிகையில் வெளிவரும் பரபரப்பு தகவல்களுக்கு விழுந்தடித்துக்கொண்டு பதில்கூற வேண்டிய அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடு.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் சகலரும் ஒன்றுகூடி ஆராயந்த பின்னரே எமது அவதானங்களை வெளியிடமுடியும்.
5 வருடங்கள் ஆளுவதற்கு மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு சபையே மாகாண சபையாகும். இதனால் ஏன் கிழக்கு மகாண சபையை முகன்கூட்டியே கலைக்க வேண்டும் என்பதில் எமது கட்சிக்குள் சில விமர்சனக் கருத்துக்கள் உள்ளன. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமான தீர்மானிக்கும் கட்சி என்ற நிலையில் இதுகுறித்து தீர ஆலோசிக்க வேண்டியுள்ளது.
அரசு முக்கூட்டியே கிழக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கும் முதலமைச்சர் நியமனத்துக்கும் முடிவுள் எடுக்கும் வேளையில் அரசு எம்முடன் ஆலோசிக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கையுண்டு எனவும் இதன்போது ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Post a Comment