Header Ads



தண்ணீர் குடியுங்கள் - நன்றாக பரீட்சை எழுதலாம் - ஆய்வில் தகவல்

இங்கிலாந்தை சேர்ந்த மனோதத்துவ அமைப்பினர் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர். நன்றாக தேர்வு எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற ரீதியில் இந்த ஆய்வு நடந்தது. இதில் தேர்வு எழுத செல்லும் முன்பு ஒரு தம்ப்ளர் தண்ணீர் குடித்து விட்டு சென்றால் நன்றாக தேர்வு எழுதலாம் என்று கண்டுபிடித்து உள்ளனர்.

தாகத்தில் இருக்கும் போது முளை செல்கள் சோர்வு அடைந்து இருக்கும். தண்ணீர் குடித்ததும் மூளை செல்கள் சுறுசுறுப்பு அடைந்து செயல்பாடுகள் அதிகரிக்கும். இதனால் ஞாபகசக்தி அதிகமாகி மனதில் உள்ளது எல்லாம் ஞாபகத்துக்கு வரும் இதனால் சிறப்பாக தேர்வு எழுதலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் நடத்திய ஆய்வில் தண்ணீர் குடித்து விட்டு தேர்வு எழுதியவர்கள் வழக்கமாக தேர்வு எழுதியதை விட 10 சதவீதம் நன்றாக தேர்வு எழுதினார்கள்.

No comments

Powered by Blogger.