முஸ்லிம் சேவை பணிப்பாளர் நூரானியா ஹசன் அகால மரணம் - 6 பேர் காயம் (update)
ரம்பாவெல - மிஹிந்தலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகத்துறை பணிப்பாளராகவும், முஸ்லிம் சேவை பணிப்பாளராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் காலமாகியதோடு மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை - ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ஸ்தலத்திலேயே சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் மரணமடைந்துள்ளார்.



Post a Comment