Header Ads



தென்னாபிரிக்கா ஜனாதிபதிக்கு 6 ஆவது திருமணம் - 20 பிள்ளைகள்

தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா. வயது 70, அடுத்த வாரம் ஆறாவது முறையாக, திருமணம் செய்து கொள்கிறார். தென் ஆப்ரிக்க அதிபர் ஜுமாவுக்கு, தற்போதைய நிலையில், மூன்று மனைவியர் உள்ளனர்.

ஏற்கனவே இவர், 98ல் ஒரு மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மற்றொரு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.இவர், கடந்த 2009ல் அதிபரான பிறகு, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், அடுத்த வாரம், குளோரியா போங்கிலி என்ஜிமா என்ற பெண்ணை, திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஏற்கனவே, இந்த பெண்ணுடன் பழகி வரும் ஜுமா, தென் கொரியாவில், கடந்த ஆண்டு நடந்த, ஜி20 மாநாட்டுக்கு, என்ஜிமாவுடன் வந்தார். என்ஜிமாவுக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான்.அடுத்த வாரம், ஆறாவது முறையாக, ஜுமா திருமணம் செய்து கொள்ளப் போவதை, அதிபரின் தகவல் தொடர்பாளர் மேக் மகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ஜுமாவுக்கு, தற்போது 20 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.