ஒபாமாவின் தலைக்கு 10 மில்லியன் பரிசுதொகை டொலர் அறிவித்த பிரிட்டன் முஸ்லிம் எம்.பி.
அமெரிக்கா அதிபர் ஒபாமா தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து பிரிட்டன் எம்.பி. ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் நஸீர் அகமது. இவர் அந்நாட்டு பாராளுமன்ற பிரபுக்கள் (மேல்) சபை உறுப்பினர் ஆவார். பாகிஸ்தான் வம்வசா வழியைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றிருந்த போது ஹரிபூரில்நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தான் வரும் பட்சத்தில் அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் என கூறினார்.
இவரின் பேச்சுக்கு பிரிட்டனின் தொழிலாளர் கட்சி கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு பழிவாங்கும் விதமாக இவர் பேசியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதனை நஸீர் அகமது மறுத்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டோனிபிளேர், ஜியார் புஷ் ஆகியோர் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனைத்தான் பேசினேன். ஒபாமா குறித்து பேசவில்லை எனகூறினார்.இது குறித்து பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நஸீர் அகமது கூறிய கருத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை அவரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரும் அதிகாரம் சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்றார்.

Post a Comment