1000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு உதயன் பத்திரிகைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் வழக்குத் தாக்கல்
உதயன் பத்திரிகை செய்தி ஒன்று வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா தருமாறு கேட்டு இலங்கை அரசின் பாரம்பரிய, சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
உதயன் வெளியிட்ட செய்தியால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு "மனச்சஞ்சலமும் அவமானமும்" ஏற்பட்டுள்ளதாம். அதனால் 1,000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக 1,000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி, வழக்குச் செலவு ஆகியன தனக்குத் தரப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தனது மனுவில் கோரி இருக்கிறார்.
அதேநேரம் இந்த வழக்கை எதிர்கொள்வதற்காக உதயன் பத்திரிகை பிரபல சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸவை அணுகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment