Header Ads



பிரான்சில் யூத பள்ளிக்கூட தாக்குதலும், புரியாத புதிர்களும்...!


பிரான்சில் யூத பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான மர்மங்கள் இதுவரை விலகவில்லை. அல்காயிதா இயக்கத்தைச் சார்ந்தவருக்கு இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், ஒருவரால் வெவ்வேறான 3 தாக்குதல்களில் 7 பேரை எவ்வாறு கொல்ல இயலும்? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

முஹம்மது மீரா என்பவர் அல்காயிதாவைச் சார்ந்தவர் என்று போலீஸ் கூறுகிறது. அவரது பின்னணிக் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த போதிலும் தாக்குதல்களை தடுக்க பிரான்சு உளவுத்துறைக்கு ஏன் இயலவில்லை என்று உள்ளூர் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரே நபர், ஒரே வகையான ஆயுதங்கள், ஒரே வாகனம் இதன் மூலம் சில தினங்கள் இடைவெளியில் 7 பேரை கொலைச் செய்து பின்னர் அவர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொலைச் செய்யப்படும் பொழுது மர்ம முடிச்சுகள் அவிழாமல் மீதமுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

முதல் தாக்குதல் நடந்த உடனேயே இண்டலிஜன்ஸிற்கு முஹம்மது மீராவைக் குறித்து தகவல் கிடைத்ததாம். பின்னர் ஏன் அவரை கைது செய்யவில்லை? ஏன் குழந்தைகளை கொலைச் செய்யும் வரை அவர் சுதந்திரமாக விடப்பட்டார்? இவ்வழக்கை கையாளுவதில் அரசியல் தூண்டுதல் இருந்ததா? போன்ற கேள்விகளை இடதுசாரி பத்திரிகையான லிபரேசன் எழுப்பியுள்ளது.

மீரா ஒளிந்திருந்தார் என்று கூறப்படும் கட்டிடத்திற்குள் 32 மணிநேரம் அவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த பிறகு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரை உயிருடன் பிடிப்பதற்கு ஏன் இயலவில்லை. கட்டிடத்தின் உச்சியில் இருந்து தப்பிக்க முனைந்தபோது மீரா சுட்டுக் கொல்லப்பட்டதும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இவரைக் குறித்து பரப்புரைச் செய்யப்படுவது எல்லாம் வழக்கமான தீவிரவாத கதைகளைப் போன்றதாகும் என்றும், எதேச்சையானது அல்ல என்றும் பலரும் கருதுகின்றனர்.

அல்காயிதாவின் உறுப்பினரான முஹம்மது மீரா, ஃபலஸ்தீனில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளை கொலைச் செய்யப்படுவதற்கும், ஆப்கானில் பிரான்சு ராணுவம் இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இக்கொலைகளை செய்திருப்பதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், முன்னர் இவர் கொலைச் செய்த 3 ராணுவ வீரர்களில் 2 பேர் முஸ்லிம் ஆகும். ஒருவர் வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியைச் சார்ந்தவர் ஆவார்.  இந்நிலையில் போலீஸாரின் கூற்று வலுவிழந்து போகிறது.

ஈரானுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வேளையில் இஸ்ரேல் மீது மேற்கத்திய உலகத்திற்கு அனுதாபம் அதிகரிக்கவும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை அதிகரிக்கச் செய்யவும் நடத்தப்பட்ட தாக்குதல் நாடகம்தான் பிரான்சில் நடந்த தாக்குதல்கள் என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது குறிப்பாக காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்தும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து மேற்கத்திய மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 16 பேரை கொலைச் செய்த வெறிப்பிடித்த அமெரிக்க ராணுவவீரனின் கொடூரத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுத்துவரும் வேளையில் இச்சம்பம் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானில் நடந்த சம்பவத்தை சாதாரண சம்பவமாக சித்தரித்துவிட்டு, பிரான்சில் நடந்த சம்பவத்தை இஸ்லாமிய பயங்கரவாதமாக சித்தரிக்கும் முயற்சியும் நடந்துவருகிறது.


1 comment:

  1. கட்டுரையில் வெளியிடப் பட்டுள்ள சந்தேகங்கள் நியாயமானவையே.
    பிரான்சு உளவுத்துறையே தமக்குப் பிடிக்காத முஸ்லீம் போலிஸ்காரர்களை
    கொலை செய்துவிட்டும், இஸ்லாத்தின் மீது இழுக்கை ஏற்படுத்துவதற்காகவும்,
    பாலஸ்தீன போராட்டங்களை கொச்சைப் படுத்துவதட்காகவும், ஆப்கான் படுகொலைகளில் இருந்து
    மக்களின் கவனத்தை திசை திருப்புவதட்காகவும் அப்பாவி யூத பள்ளிக் குழந்தைகளை
    கொலை செய்தும் விட்டும் ஆடிய ஒரு நாடகமாகக் கூட இது இருக்க வேண்டும்.

    ஏனெனில் அவர்களே கூறும் தனி நபரான கொலைகாரனை, மிகத் திறமையான
    பிரான்சு பொலிசாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன்?

    யாரோ ஒரு முஸ்லீமைக் கொன்று விட்டு, தாம் செய்த இரகசிய கொலைகளை
    அவன் மீது போட்டுவிட்டு பைலை மூடும் தந்திரமா?

    மேலும், இஸ்லாத்தை சரியாக விளங்கிய எந்த ஒரு முஸ்லீமும் பிரான்சு
    சொல்கின்றபடி செயல்பட மாட்டான் என்பதே உண்மையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.