யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் அடுத்த அதிபர் யார்..?
யாழ் யூஸுப்
யாழ் ஒஸ்மானியாக கல்லூரி 2013இல் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதிருந்த செய்யப்பட வேண்டும் என்பது பழைய மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.
யாழ்ப்பாண சமூகத்தின் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. அதாவது அதிபர் முபாரக் அவர்களின் பதவிக்காலம் இன்னும் எட்டு வருடங்களில் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் அடுத்த அதிபராக வரக்கூடிய ஒரு முஸ்லிமொருவரை தயார் செய்ய வேண்டிய பாரிய கடமை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களில் ஆண்கள் பொதுவாக ஆசிரியர் தொழிலுக்குச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் பட்டப்படிப்புகள் , அதிபர் தர பரீட்சை, கல்வியியல் டிப்ளோமா கற்கைநெறி போன்றவற்றில் பங்கு பற்றி தமது தரங்களை உயர்த்திக் கொள்ள பெரும்பாலானவர்கள் முயற்சிப்பதில்லை. இதனால் முபாரக் மௌலவியை அடுத்து அதிபராக வரக்கூடிய ஒருவரை தற்போதிருந்த தயார் செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக ஆசிரியர் தொழில் செய்யும் யாழ்ப்பாண முஸ்லிம்களை அதிபர் பதவியை பெற எவ்வாறான கல்வித் திட்டங்கள் பரீட்சைகள் உதவுமோ அவ்வாறானவற்றை செய்து முன்னேறுமாறு கூற வேண்டும். அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் யாழ் நோனகதெருவில் இன்ஷா அல்லாஹ் பாரிய ஒரு மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. அந்நிலையில் ஆசிரியர் தொழிலிருந்து அதிபர் தரம் பெற்றவர்கள் பிரதி அதிபராக யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றால் அதிபர் முபாரக் ஓய்வு பெறும் போது ஒஸ்மானியாவின் அதிபர் பதவியை புதியவர் பொறுப்பேற்கலாம்.
ஏற்கனவே யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் ஒரு பழைய மாணவர் எழுதியது போல் ஒஸ்மானியாவில் ஆசிரியர் தங்குமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் தங்கக் கூடிய வசதிகளைக் கொண்டதாக அந்த தங்குமிடங்கள் அமைய வேண்டும். தற்போது அதிபராகவுள்ள முபாரக் மௌலவியே அதைச் செய்ய ஆவண செய்ய வேண்டும்.
பின்னேர வகுப்புக்கள ஏற்பாடு செய்யப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். புல ஆசிரியர்கள் ஆற்றல் பெற்று விளங்கினர். தங்கராஜா உள்ளிட்ட பல தமிழ் ஆசிரியர் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக அயராது பாடுபட்டார். ஜனாப். கியாரத் அவர்கள் விளையாட்டுத்துறையில் மாணவர்களை முன்னேற்றி மாணவர்களின் மனதில் இடம்பிடித்தார். முன்னாள் ஆசிரியர் நஜுமுதீன் அவர்கள் கல்லூரியின் வரலாற்றை முழுமையாக எழுதி வைத்தார். அவ்வாறானவர்கள் போன்று சேவையாற்றக் கூடிய ஆசிரியர்களை தேடிப் பிடிக்க வேண்டிய கடமை அதிபருக்குண்டு.
அவருக்கு உதவிகளை வழங்கும் தார்மீகக் கடமை பழைய மாணவர்களுக்கு உள்ளது. மேலும் இலவசமாக கல்வி சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கக் கூடிய ஒரு குழுவை அதிபர் உருவாக்கி அவர்களின் அனுபவங்களையும் மாணவர்கள் பெற்று தமது எதிர்கால வாழ்க்கையை திட்டமிட ஆவண செய்ய வேண்டும்.
ஒஸ்மானியா முன்பு போல் கல்வித்துறை விளையாட்டுத்துறை ஒழுக்கவியல் போன்றவற்றில் முன்னேறி வெற்றி நடை போட எமது வாழ்த்துக்கள்.

அடுத்த அதிபராக தகுதியுள்ள நபர் சொனகதேருவைச் சேர்ந்த
ReplyDeleteஅப்துல் லத்தீப் அஹ்மது நவாப் ஆவார்.
இவர் மிகவும் திறமைசாலியாவார்.
உரியவர்களுக்கு உரிய சந்தர்ப்பத்தில்
உரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும்.
where is he living. What is his contact number. Is he willing to resettle in Jaffna.
ReplyDeleteYousuf