Header Ads



உதைப்பந்தாட்ட போட்டியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல் - லண்டனில் முக்கிய தீர்மானம்


கால்பந்து போட்டியின் போது பெண்கள் தலைலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை ஐ. நா. சபை கோரியுள்ளது.

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விளையாட்டு துறை தொடர்பான ஆலோசகர் வில்பிரை லெம்கே, பிபா தலைவர் செப் பிளாட்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘இந்த ஹிஜாப் விவகாரம் போட்டிக்கும், சட்டத்திற்கும் பாதகமில்லாம் கலாசாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தித் தீர்க்கப்படவேண்டும்.

இதில் அனைத்துப் பெண்களும் கட்டுப்பாடில்லாமல் போட்டியில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்” என வில்பிரை லெம்கே தனது கடித்தத்தில் கூறியுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இங்கிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதில் பெண்கள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 


No comments

Powered by Blogger.