Header Ads



சுனாமிக்கு காணாமல்போன முஸ்லிம் சிறுமி பிச்சைக்காரியாக மீட்பு

இந்தோனேசியாவில், 2004ல் ஏற்பட்ட சுனாமியின் போது காணாமல் போன சிறுமி, ஏழாண்டுகள் கழித்து மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தார்.கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியில் தெற்காசியாவில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாயினர்.

இந்தோனேசியாவின், யுஜோங் பரோ என்ற கிராமத்தைச் சேர்ந்த யூசுப் மற்றும் யுஸ்னியார் தம்பதிகளின் மூன்று பெண் குழந்தைகளும் இந்த சுனாமியில் காணால் போயினர்.இந்நிலையில், இந்தோனேசியாவின் அட்சய் மாகாணத்தின் மெலாபோ நகரில், அத்தம்பதியரின் ஒரு மகளான "வதி' என்பவள், ஒரு ஓட்டலின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறாள்.

அவளது தாத்தா அவளை அடையாளம் கண்டு கொண்டு, பெற்றோருக்குத் தகவல் சொல்லி அனுப்பினார்.அதன் பின், பெற்றோர் வந்து அவளைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். விசாரணையில், வதி, பிச்சையெடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

No comments

Powered by Blogger.