Header Ads



பணம், அழகை பாதுகாக்கும் நாம் உடல் நலனை பாதுகாப்பதில்லை - புற்றுநோய் அழகி


வெனிசுலா நாட்டின் முன்னாள் அழகி மார்பக புற்றுநோய் காரணமாக இறந்தார். வெனிசுலா நாட்டின் முன்னாள் அழகியாக தெரிவு செய்யப்பட்டவர் ஈவா எக்வால்(28).இவர் மொடல் அழகியாகவும், நடிகையாகவும் இருந்தார். கடந்த ஆண்டு இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் நகரில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த நாடான வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டது. தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்ததும் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புத்தகம் ஒன்றை எழுதினார். 

அதில் மக்களாகிய நாம் பணத்தை சம்பாதித்து சேமித்து வைத்திருக்கிறோம். அதன் மூலம் அழகை பேணி பாதுகாக்கிறோம். ஆனால் உடல்நலனை கவனிக்க தவறி விடுகிறோம் என கூறியுள்ளார்

No comments

Powered by Blogger.