Header Ads



அமெரிக்க, இஸ்ரேலிடமிருந்து கைப்பற்றிய 7 விமானங்களை காட்சிக்கு வைக்கிறது ஈரான்

ஈரானை உளவு பார்ப்பதற்காக, வெளிநாடுகளால் அனுப்பப்பட்ட உளவு மற்றும் போர் விமானங்களை, வெளிநாட்டு உயர் அதிகாரிகளின் பார்வைக்கு வைக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

ஈரானை உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலும், அமெரிக்காவும் பல உளவு மற்றும் போர் விமானங்களை அனுப்பி வந்துள்ளன. அவற்றில் சிலவற்றை, ஈரான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது. சமீபத்தில், அவ்வாறு ஈரான் வான்வெளிக்குள் நுழைந்த, அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் ராணுவம் சிறை பிடித்தது. 

இந்நிலையில், மெஹ்ர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரான் வசம் உள்ள, இஸ்ரேலின் நான்கு விமானங்களும், அமெரிக்காவின் மூன்று விமானங்களும் விரைவில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களைப் பார்வையிட, தேசிய பத்திரிகையாளர்கள், டெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும், மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.