இலங்கையில் மின்சாரம் வசதியற்ற குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம்
சூரிய சக்தியில் இயங்கும் மின் கலங்களை மின்சாரம் கிடைக்காமல் இருக்கும் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் வழங்குவதற்கு மின் சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் வடக்கில் 3,133 குடும்பங்களும் கிழக்கில் 4,887 குடும்பங்களும் பயனடையவிருப்பதாக தெரிய வருகிறது.
தேசிய மின் விநியோகத்தின் மூலமாக மின் சாரத்தை பெற்றுக்கொள்ள முடியாது இருக்கும் சகல குடும்பங்களுக்கும் சூரிய சக்தி மின் கலங்களை வழங்க தீர்மானித்திருப்பதாக மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கிராமிய சக்தி திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட விருப்பதாகத் தெரிய வருகிறது. 2012 ஆண்டு முடிவுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் மின்சாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கென நாடு முழுவதும் 37000 குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் வடமேல் மாகாணத்தில் 12,971 குடும்பங்களும், சப்பிரகமுவ மாகாணத்தில் 7,678 குடும்பங்களும், ஊவா மாகாணத்தில் 5,259 குடும்பங்களும், கிழக்கு மாகாணத்தில் 4,887 குடும்பங்களும், வட மாகாணத்தில் 3,133 குடும்பங்களும், மத்திய மாகாணத்தில் 2,924 குடும்பங்களும், தென் மாகாணத்தில் 760 குடும்பங்களும், வட மத்திய மாகாணத்தில் 185 குடும்பங்களும், மேல் மாகாணத்தில் 17 குடும்பங்களும் இனங்காணப்பட்டுள்ளன.
வருமானம் குறைந்த, மற்றும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கென கடன் திட்டமொன்றை மின்சார சபை அமுல்படுத்தவிருப்பதாகவும் தெரிய வருகிறது. மின்சார இணைப்பை பெறுவதற்காக அவர்கள் 30 ஆயிரம் ரூபா கடன் பெற்றுக் கொண்டு தவணை முறையில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment