Header Ads



பால்நிலை சமத்துவத்தில் இலங்கை பின்னடைவு கண்டுள்ளதாம்

பால்நிலை சமத்துவத்தில் இலங்கை பின்னணிக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலகப் பொருளாதாரப் பேரவை தெரிவித்துள்ளது. பால்நிலை சமத்துவத்தில் சர்வதேச அளவில் இலங்கை 31ம் இடத்தை வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு 16ம் நிலையை வகித்த இலங்கை இந்த ஆண்டில் 31ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பால்நிலை சமத்துவத்தில் முதல் இருபது நிலைகளை வகித்து வந்த இலங்கை தற்போது பின்னணிக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார பங்களிப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல் அதிகாரம் போன்ற காரணிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிலவி வரும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பால் நிலை சமத்துவம் கணிக்கப்படுகின்றது. தொழிற்சந்தையில் பெண்களுக்கான வாய்ப்பின் அடிப்படையிலான கணிப்பீட்டில் இலங்கை 119ம் நிலை வகிக்கின்றது. சுகாதாரத்தில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.