Header Ads



'ஆங்கில மொழி தெரியாத அனாதை' தான் என்கிறர் உழக அழகி

2011ஆம் ஆண்டின் உலக அழகு ராணியாக வெனிசுவெலா தேசத்தின் அழகுராணி இவ்யன் சார்கோஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவுசெய்யப்பட்டார். அனாதை சிறுமியாகவிருந்த தனக்கு வாழ்க்கையில் முன்னிலைக்கு வரவேண்டுமென்று தோன்றிய தைரியமே இந்த உயர் நிலைக்கு தன்னை உயர்த்தியிருக்கிறது என்று அவர் கூறினார்.

22 வயதான இவர் தனது எட்டாவது வயதில் பெற்றோரை இழந்த பின்னர் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நடத்திய அனாதை இல்லத்தில் ஐந்து வருடங்கள் பராமரிக் கப்பட்டார். இப்போது அவர் வெனி சுலாவின் ஒளிபரப்பு நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் மனித வளங்கள் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருடன் மேலும் 15 சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.

ஆங்கில மொழி தெரியாத காரணத்தினால் லண்டனில் உலக அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட பின்னர் ஒரு மொழிபெயர் ப்பாளரின் உதவியுடன் பேசுகையில் சந்தர்ப்ப சூழ்நிலையே மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். இந்த அனுபவத்தின் மூலமே நான் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன் என்று தெரிவித்த அவர், மக்களுக்குப் பணியாற்றப்போகும் நாம் எனது கரங் களில் அழுக்குப் படப்போவதைப் பற்றி கவலைப்படவில்லையென்று கூறினார்.

5 அடி 10 அங்குலம் உயரமான இவர் அடுத்த ஓராண்டு காலத்துக்கு உலக அழகு ராணியாக இருப்பதனால் பல அறக்கட்டளை நிதியங்களுக்கு 580 மில் லியன் யூரோவை திரட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்தார். இவர் கரப்பந்தாட்டம் விளையாடுவதிலும், மலை ஏறுவதிலும் தனது ஓய்வுநோரத்தை செலவிடுகிறார்.

No comments

Powered by Blogger.