நாட்டை பாதுகாக்க ஒன்றுபடுமாறு எதிர்கட்சிகளுக்கு சரத் பொன்சேக்கா அழைப்பு
ஊழல், மோசடி தலைவிரித்தாடும் இந்த ஆட்சி பீடத்திலிருந்து நாட்டைக் பாதுகாப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி ஆகிய எதிர்க்கட்சிகள் மோசடி மிக்க ஆட்சிப் பீடத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் இணைந்து மாபெரும் சக்தியாக உருவெடுக்காவிட்டால், நாட்டு வளங்களை சூறையாடி அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வரும் சரத் பொன்சேகா மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துவரப்பட்டார். சிகிச்சை முடிந்தப் பின்னர் வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலைக்கு மீண்டும் திருப்பும் வழியில் வெளியிட்டப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment