Header Ads



ஈரான் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் - ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ஜனாதிபதி

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பரிஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்தே இஸ்ரேல் ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ‘ஹயோம் டெய்லி’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ஷிமோன் பரிஸ் கூறியிருப்பதாவது:- ஈரான் மீது இராணுவ ¡க்குதல் நடத்தும் சாத்தியம் அதிகரித் துள்ளது.  இதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகிறது என்றார். இஸ்ரேல் அண்மையில் சோதித்த ஏவுகணை மூலம் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டி ருந்தமை குறிப்பிடத் தக்கது.

No comments

Powered by Blogger.