Header Ads



நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

 
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில், போகோ ஹராம் என்ற அமைப்பு நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களில், 150 பேர் பலியாயினர்.நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள யோப் மாகாணத்தின் டமாடுரு என்ற நகரில், நேற்று பல சர்ச்சுகள், போலீஸ் தலைமை நிலையம், மசூதிகளில், அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

அதேபோல், யோப் மாகாணத்தை அடுத்துள்ள போர்னோ மாகாணத்தின் மைடுகுரி நகரில், தற்கொலைத் தாக்குதல் நடந்தது. இரு சம்பவங்களிலும், ஏழு போலீசார், இரு ராணுவ வீரர்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவங்களுக்கு, அல்-குவைதாவுடன் தொடர்புடைய, போகோ ஹராம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது."பாதுகாப்புப் படையினர், எங்கள் நபர்களைத் தாக்குவதும், பொதுமக்களைத் துன்புறுத்துவதும் நிற்கும் வரையில், அரசு அமைப்புகளின் மீதான எங்கள் தாக்குதல் தொடரும்' என, போகோ ஹராம் மிரட்டல் விடுத்துள்ளது.

இக்கொடூர சம்பவங்களுக்கு, அதிபர் குட்லக் ஜோனதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2004ல் நிறுவப்பட்ட போகோ ஹராம் அமைப்பின் முக்கிய நோக்கம், நைஜீரியாவை, முழுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமல்படுத்தும் நாடாக்குவது தான்.மேற்கத்திய கல்வி முறைகளுக்கு எதிரான இந்த அமைப்பு, நாட்டின் வடபகுதியில் உள்ள 12 மாகாணங்களில் அமலில் உள்ள ஷரியா சட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.

No comments

Powered by Blogger.