Header Ads



இலங்கையில் 11,13,680 பேர் பேஸ்புக் உபயோகம் - உலகில் 76 ஆவது இடம்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 680 பேர் பேஸ்புக் உபயோகிப்பதாக 'சோசில் பேக்கர்" மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக நாடுகளில் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் வரிசையில் இலங்கை 76 ஆவது இடத்தை வகிக்கிறது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோர் 5.18 வீதமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே அதிகளவில் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். 65 வயதுக்கு மேற்பட்டோர் 1 வீதமாகவும் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டோர் 32 வீதமாகவும் 35 வயதுக்கு இடைப்பட்டோர் 8 வீதமாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.