Header Ads



துனிசியாவில் தேர்தல் - இஸ்லாமிய கட்சி வெற்றி பெறலாம்

துனிசியாவில் 23 ஆண்டு காலம் அதிபராக இருந்த பென் அலி ஆட்சி 9 மாத மக்கள் போராட்டத்துக்கு பின் முடிவுக்கு வந்தது. பென்அலி சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடி விட்டார். இடைக்கால அதிபராக போயுத் மெபாஷா உள்ளார்.

இந்த நிலையில் துனிசியாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 213 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு சுமார் 72 லட்சம் மக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் பென்அலி ஆட்சியில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய என்னாதா கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதில், இஸ்லாமிய என்னாதா கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் முடிந்தவுடன் இடைக்கால அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக மெபாஷா அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.