Header Ads



வடமாகாணத்தில் புதிய முதலீடுகள் அதிகரிப்பு

வட மாகாணம் தற்போது முதலீட்டு சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமைதியான சூழ்நிலை மற்றும் முதலீட்டாளர் நட்பு பின்னணி என்பன அடிப்படையில் வடக்கில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

இரண்டு சிறிய மற்றும் பாரிய ஆடை தொழில் முனைவோர், சுற்றுலா, சுகாதாரம், மின்சார துறை, மீன்பிடி மற்றும் பிற துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பிராந்தியத்தில் ஒவ்வொரு துறைகளிலும், 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான முதலீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வடக்கில் முதலீடுகள் குறித்து விரிவாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முதலீட்டுச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் பிரதி இயக்குனர் ஜே.ஜெயமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு புதிய சலுகைகளை வழங்குவதற்கும் முதலீட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.