Header Ads



முஸ்லிம் சிறுமி மீது அசிங்கம் - வர்த்தகைரை கைதுசெய்ய வக்கற்ற பொலிஸ்

கண்டி அம்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரை இது வரை ஏன் கைது செய்யவில்லை என பல்லேகல பிரதேச சபை அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டது.பல்லேகல நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான குணதிலக ராஜபக்ஷவே இந்த விடயம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

குறிப்பிட்ட சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரபல வர்த்தகரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனறு தெரிவித்த அவர், இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸில் ஏலவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் குறிப்பிட்ட வர்த்தகருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.