அவுஸ்திரேலியா பறந்தார் மஹிந்த - விசாரணையை எதிர்கொள்வாரா..??
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார்.
இலங்கை மீது மனித உரிமை மீறல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச ஜூரி சபையின் அவுஸ்திரேலிய கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிராந்திய பொலிஸார் விசாரணைகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யக் கூடாதென நியூசிலாந்தில் உள்ள தமிழ் குழுக்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. இவ்வாறான சூழ்நிலைகள் காணப்படும் நிலையில் ஜனாதிபதி அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார்.

Post a Comment