Header Ads



2012 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் - மீள்குடியேற்றத்திற்கு 481,605,000

 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மொத்த செலவினமாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 428 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கென 23 ஆயிரத்து 4 கோடியே 30 இலட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை 2011ஆம் ஆண்டை விட ஆயிரத்து 321 கோடியே 11 இலட்சம் ரூபா மேலதிகமாகும்.

இந்தநிலையில் 2011 ஆம் ஆண்டை விடவும் 2012 ஆம் ஆண்டுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 15 ஆயிரத்து 176 கோடியே 67 லட்சத்து 5 ஆயிரம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதிகளின் முக்கிய விவரம் வருமாறு,

 * ஜனாதிபதி செயலகம் 11,178,273,000
 * பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சு 230,043, 000,000
 * பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 104,571,330,000
 * அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 1,419,000,000
 * சிறுவர் அபிவிருத்தி மகளிர் அமைச்சு 949,000,000
 * பொதுசன ஊடக தகவல் அமைச்சு 2,105,000,000
 * நிர்மாண பொறியியல், வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு 2,787,605,000
 * சமூக சேவைகள் அமைச்சு 1,118,000,000
 * கல்வி அமைச்சு 33,266,010,000
 * சுகாதார அமைச்சு 73,999,998,000
 * போக்குவரத்து அமைச்சு 53,540,000,000
 * பெற்றோலிய வளத்துறை அமைச்சு 108,450,000
 * தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சு 426,000,000
 * மீள்குடியேற்ற அமைச்சு 481,605,000
 * உயர் கல்வி அமைச்சு 24,470,000,000
 * தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சு 68,690,000

No comments

Powered by Blogger.