படுத்துறங்க இடம்கேட்டு பின் கொள்ளையடித்தோர் பள்ளிவாசல் பகுதியில் மாட்டினர்
படுத்துறங்க இடமில்லை என உதவி கேட்டுவந்த இருவர், இரவு தங்கி இருந்து வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களைத் திருடிச் சென்றனர். சந்தேக நபர்களைச் சாவகச்சேரிப் பொலிஸார் பள்ளிவாசல் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் சாவகச்சேரி ரயில் நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரி நகர்ப் பகுதியில் நகை வேலை செய்யும் கடை வைத்திருக்கும் ஒருவர் அந்த வீட்டில் தங்கியுள்ளார். சந்தேக நபர்கள் வீட்டாரிடம் கேட்டு அன்றிரவு தங்கியுள்ளனர். அதன் போதே கடைக்காரரின் நகைகள் திருடப்பட்டுள்ளன. இத்திருட்டு தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அந்த இருவரையும் கைது செய்த பொலிஸார் திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.
யாழ். நகரில் 8 கடைகளில் திருட்டு முயற்சி
யாழ். நகரின் மையப்பகுதியில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள 8 கடைகளில் நேற்றுமுன்தினம் இரவு திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2 கடைகளில் மாத்திரம் பணமும், பொருள்களும் திருடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யாழ்.நகரின் முக்கிய இடங்களான மின்சார நிலைய வீதி, ஸ்ரான்லி வீதி என்பவற்றில் உள்ள கடைகளிலேயே இந்தத் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரான்லி வீதியில் நாகவிகாரைக்கு அருகில் அமைந்துள்ள மருந்தகம் மற்றும் ஈ.பி.டி.பியின் ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் அதே வீதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம், மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள புடைவைக் கடை என்பவற்றிலேயே இந்தத் திருட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை யாவும் ஒரே இரவிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதில் மருந்தகம் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் என்பவற்றிலேயே பணம் மற்றும் பொருள்கள் திருட்டுப் போயுள்ளன. அனைத்துக் கடைகளினதும் பூட்டுக்களைத் தெண்டி உடைத்தே உள் நுழைந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் அதி உச்சப் பாதுகாப்புப் பிரதேசத்தில் இருக்கும் கடைகளில் இவ்வாறான திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது வர்த்தகர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இது குறித்து வர்தகர் ஒருவர் தெரிவிக்கையில், எனது கடையில் இரவு 10 மணியளவில் நின்றால் இராணுவத்தினர் வந்து விசாரிப்பார்கள். இப்படியிருக்கையில் கடும் இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் கடைகளில் இவ்வாறான திருட்டு இடம்பெற்றிருப்பது என்பது கேள்விக்குரிய விடயம்தான் என்றார். இருப்பினும் இந்தத் திருட்டுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment