Header Ads



நாட்டு மக்கள் உண்மையை பேச அச்சப்படுகின்றனர் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

நாட்டில் உண்மையை கதைப்பதற்கு அச்சம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவிக்கின்றார். வௌ்ளவத்தையில்  நடைபெற்ற கூட்டமொன்றில் ககருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறினார்.

சிலர் ஊடகஙகளை அச்சுறுத்தி தமக்கு தேவையான காட்சிகளை உருவாக்கி காட்சிப்படுத்துவதாகவும் மக்களுக்கு அதனையே பார்ப்பதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குறிப்பிட்டார். உண்மையை கதைப்பதற்கு மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

கொழும்பிலுள்ள வளங்களுக்கு விலைமனுக்கள் கோரப்படாமல் தாம்  விரும்பிய தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாககவும் அவர் கூறினார். இதன் போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்வதற்கான சூழல் உருவாகினால் மாத்திரமே நாடு அபிவிருத்தி அடைந்துள்ளது என கருத முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.