Header Ads



அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகிறது - ஐ.தே.க.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த முறை இடம்பெறும் உள்ளுராட்சி சபை தேர்தலிகளில் பல வேட்பாளர்களை அரசாங்கத்தின் ஒப்பந்தகாரர்கள் அடிப்படையிலேயே நிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கண்டி – கட்டுகலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கோங்கிரஸ் மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தலில் நிறுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் ஒப்பந்தகாரர்களாகவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்வாறு வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர்கள் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்வார்கள் என்றும் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வியெழுப்பினார்.

No comments

Powered by Blogger.