Header Ads



வெளிநாடுகளிலுள்ளவர்களை வாக்காளர் இடாப்பில் பதிய சந்தர்ப்பம்

 இடம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களை 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பதியும் நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் கிராம சேவகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்க ளில் தங்கியுள்ளதால் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய முடியாதவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பில் வட பகுதியிலுள்ள மக்களை அறிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தவிர வவுனியா இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கை அக்டோபர் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெற உள்ளது. வெளிநாட்டிலுள்ளவர்கள் தமது கடவுச் சீட்டு இலக்கத்தையும் முகவரியையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்க முடியும் என யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி கூறினார்.

No comments

Powered by Blogger.